உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயி@ரிழப்பு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
92 பார்வைகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார்

குறித்த விபத்து இன்று 24.09.2026 பிற்பகல் 3 மணியளவில் பரநதன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் – எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என்ற சிறுவனே விபத்தில் பலியாகியுள்ளான்.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகு கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்று, பெருந்தொகையான கஞ்சாவுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு…

88 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனம், மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் – சத்தியலிங்கம் எம்.பி வலியுறுத்தல்…!

நீதித்துறையின் சுயாதீனம், சமத்துவம் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும் என 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இன்றைய (24.09.2026) பாராளுமன்ற விவாதத்தின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

83 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற வாயிலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் விவசாய அமைப்பாளர் சாணக்க பண்டாரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கரும்பு விவசாயியும் சிவில் அமைப்பாளருமான சாணக்க பண்டாரவிற்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

79 0 0