உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நீதித்துறையின் சுயாதீனம், மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் – சத்தியலிங்கம் எம்.பி வலியுறுத்தல்…!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
84 பார்வைகள்

நீதித்துறையின் சுயாதீனம், சமத்துவம் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும் என 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இன்றைய (24.09.2026) பாராளுமன்ற விவாதத்தின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்த சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்மானத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய சில முக்கியமான சட்ட மற்றும் கொள்கைச் சிக்கல்கள் உள்ளன.

அரசியலமைப்புச் சீர்திருத்தம் என்பது தனிநபர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான கருவியாக இருக்கக் கூடாது. அது எதிர்கால தலைமுறைகளுக்கும் பொருந்தக்கூடிய தெளிவான, பொதுவான மற்றும் சமத்துவமான அரசியலமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

ஒரு விதி தற்போதைய பதவியிலிருப்பவருக்கு பொருந்தாது என்றால், அதற்கான காரணமும் சட்டக் கொள்கையும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அதேபோல், ஓய்வு வயதை மாற்றும் போது, அந்த மாற்றம் தற்போதைய பதவியிலிருப்பவர்களுக்கும் எதிர்காலத்தில் நியமிக்கப்படுபவர்களுக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட திருத்தங்களுடன் இந்த சட்டமூலம் சர்வசன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படலாம் என்று தீர்மானித்துள்ளது. ஆனால், அந்தத் தீர்மானம் சட்டமூலத்தின் ஒவ்வொரு கொள்கைத் தேர்வும் அரசியல் ரீதியாக அல்லது கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பொருளல்ல. அந்தக் கொள்கைத் தேர்வுகளை ஆராய்ந்து, கேள்வி எழுப்பி, சட்டத்தை நிறைவேற்றுவது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும்.

இந்த சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல சவால்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த சட்டமூலத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் Article 83 இன் கீழ் மக்கள் வாக்கெடுப்பு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஓய்வு பெறும் வயது போன்ற அடிப்படை அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் விரிவான சீர்திருத்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அவ்வாறு இருக்கும்போது, முன்னைய அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகளின் போது நீதித்துறை தொடர்பாக முன்வைக்கப்பட்ட உபகுழு அறிக்கைகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகள் இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இச்செயற்பாடு மக்களையும் நாட்டையும் பிழையாக வழிநடத்துவதாகவே நான் பார்க்கிறேன்.

பதவியில் உள்ள பிரதம நீதியரசர் (Chief Justice ) அவர்களின் சேவைக்காலம் 6 வருடங்களை தாண்டக்கூடாது என்னும் திருத்தத்தை கொண்டுவரும் அதேவேளை இத்திருத்தம் அமுலாகும் வேளையில் பதவியிலிருக்கும் பிரதம நீதியரசருக்கு பொருந்தாது என்று மாற்றப்பட வேண்டும் என்றுள்ளது. “இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டதற்கான அரசியலமைப்புச் சட்ட அடிப்படை என்ன?
தற்போதைய பிரதம நீதியரசருக்கு மட்டும் ஏன் புதிய 6 வருட வரம்பு பொருந்தாது?”

“புதிய 6 வருட பதவிக்காலம் தொடர்பாக தற்போதைய பிரதம நீதியரசருக்கு குறிப்பிட்ட விதிவிலக்கு வழங்கப்பட வேண்டுமென்றால், அதே தர்க்கத்தின் அடிப்படையில் ஓய்வு வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்தும் ஏற்பாடும் தற்போது பதவியில் இருக்கும் நீதியரசர்களுக்கு ஏன் பொருந்த வேண்டும்?”

இந்த இரண்டு சட்டமூலங்களையும் வெறுமனே “நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் சட்டம்” என்ற கோணத்தில் மட்டும் பார்க்கமுடியாது.

பின்வரும் முக்கியமான விடயங்கள் இங்கே ஆராயப்படவேண்டும்.
-நீதித்துறையின் சுயாதீனம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?

-ஓய்வு வயது மாற்றம் தற்போதைய நீதிபதிகளுக்கு எவ்வாறு பொருந்தும்?

-நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்த இது எவ்வாறு உதவும்?

-நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் பற்றாக்குறை இதனால் தீருமா?

-மாவட்ட மற்றும் மாகாண நீதிமன்றங்களின் மனிதவளப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு?

-நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இதனால் என்ன நடைமுறைப் பயன்? நிலுவையிலுள்ள 11 இலட்சம் வழக்குகளில் பெரும்பாலானவை மாவட்ட நீதிமன்றங்களிலேயே உள்ளது, எனவே அவற்றை கையாள இச்சட்டத்திருத்தம் எவ்வகையில் உதவும் என எண்ணுகிறீர்கள்?

-நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவதுடன், புதிய நீதிபதிகளை நியமிக்கும் வாய்ப்புகள் குறையுமா?

-நீதித்துறையில் தலைமுறை மாற்றம் மற்றும் அனுபவம் ஆகிய இரண்டுக்கும் இடையில் எவ்வாறு சமநிலை ஏற்படுத்தப்படும்?

இதற்கான தெளிவான காரணம் உச்சநீதிமன்றத்தின் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட சுருக்கத் தீர்மானத்தில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை.

உயர்நீதிமன்ற தீர்ப்பில் 2016 நீதித்துறை சீர்திருத்தப் பரிந்துரைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, ஆனால் அவை உண்மையில் என்ன கூறின?

2016 காலப்பகுதியில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட நீதித்துறை ஆவணங்களில், தற்போதைய அமைப்பில் மேன்முறையீட்டு (Court of Appeal) நீதிபதிகளின் ஓய்வு வயது 63 என்றும் உயர் நீதிமன்ற (Supreme Court) நீதிபதிகளின் ஓய்வு வயது 65 என்றும் குறிப்பிடப்பட்டு, superior courts அனைத்திற்கும் ஒரே ஓய்வு வயது இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

ஆகவே நீதித்துறை சீர்திருத்தத்திற்கான உபகுழுவின் நோக்கம் ஓய்வு வயதை ஒரே அளவில் வைத்திருப்பதாக இருந்தது.

அங்கு 65 இலிருந்து 67 ஆக உயர் நீதிமன்ற (Supreme Court) நீதிபதிகளின் வயதை உயர்த்த வேண்டும் என்ற தனிப்பட்ட பரிந்துரை இல்லை.

நிறைவாக, இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் எந்தவொரு தனிநபரையும் குறிவைப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைத்தன்மை, நீதித்துறையின் சுயாதீனம், சமத்துவம் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதே இந்தக் கேள்விகளின் நோக்கமாகும் எனத்தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகு கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்று, பெருந்தொகையான கஞ்சாவுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு…

89 0 0
இலங்கை செய்திகள்

நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயி@ரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று 24.09.2026 பிற்பகல் 3…

93 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற வாயிலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் விவசாய அமைப்பாளர் சாணக்க பண்டாரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கரும்பு விவசாயியும் சிவில் அமைப்பாளருமான சாணக்க பண்டாரவிற்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

79 0 0