உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த மோசடி கண்டறியப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலக்கம் 18, புகையிரத நிலைய வீதி, எல்ல எனும் முகவரியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அக்காலத்தில் அமுலிலிருந்த 2025 ஏப்ரல் 01 ஆம் திகதியிட்ட 2430/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 93 ஆம் இலக்கக் கட்டளையின் கீழ், 1 லீட்டர் பாட்டில் குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கில் பிரதிவாதி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்தே பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் 1,000,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வழக்குடன் தொடர்புடைய 100 ரூபாய் விலையானது தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை அல்ல என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

தற்போது அமுலிலுள்ள 2026 ஜூன் 10 ஆம் திகதியிட்ட 2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, உள்நாட்டில் பொதி செய்யப்பட்ட குடிநீர் போத்தல்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலைகள் பின்வருமாறு:

500 மி.லீ முதல் 999 மி.லீ வரையிலான போத்தல்: ரூ. 80

1 லீட்டர் முதல் 1.499 லீட்டர் வரையிலான போத்தல்: ரூ. 120

1.5 லீட்டர் முதல் 1.999 லீட்டர் வரையிலான போத்தல்: ரூ. 150

2 லீட்டர் முதல் 2.499 லீட்டர் வரையிலான போத்தல்: ரூ. 180

5 லீட்டர் முதல் 6.999 லீட்டர் வரையிலான போத்தல் : ரூ. 400

இதற்கமைய, 1 லீட்டர் முதல் 1.499 லீட்டர் வரையிலான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபாயாகும்.

போத்தல் குடிநீரைக் கொள்வனவு செய்யும்போது, போத்தலின் அளவிற்குரிய தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், அறவிடப்பட்ட தொகையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தங்குமிடங்கள் உட்பட அனைத்து வணிக நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பகுதியிலோ அல்லது வேறு இடத்திலோ வியாபாரத்தை முன்னெடுப்பது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகத் தொகையை அறவிடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் போத்தல் குடிநீர் விற்பனை செய்யப்படுவது உட்பட சந்தை முறைக்கேடுகள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 எனும் குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரியப்படுத்த முடியும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயி@ரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று 24.09.2026 பிற்பகல் 3…

83 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனம், மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் – சத்தியலிங்கம் எம்.பி வலியுறுத்தல்…!

நீதித்துறையின் சுயாதீனம், சமத்துவம் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும் என 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இன்றைய (24.09.2026) பாராளுமன்ற விவாதத்தின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

77 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற வாயிலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் விவசாய அமைப்பாளர் சாணக்க பண்டாரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கரும்பு விவசாயியும் சிவில் அமைப்பாளருமான சாணக்க பண்டாரவிற்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக்…

50 0 0