உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
67 பார்வைகள்

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இன்றைய தினம் (24) கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துவது ஒரு பாரதூரமான விடயம் என்பதால், அது எந்தளவிற்கு நியாயமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமையவே நாடாளுமன்றத்தினுள் 22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைப் பயன்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்பதால் அதில் தலையிடப்போவதில்லை எனக் கூறினார்.

எதிர்க்கட்சியினர் தங்களது போராட்டங்களை நடத்தட்டும், நாங்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் கூறிய அமைச்சர், அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பைப் தெரிவிப்பது எதிர்க்கட்சியின் வேலையல்ல என்றும், நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே அவர்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டை விட இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையை திறமையாகவும் பரந்த அளவிலும் விரிவுபடுத்தும் நோக்கில் 1,20,000 பேரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அரச சேவையின் சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு வேலைத்திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கடந்த இரண்டு ஆண்டுகளில் மீளக்கட்டி எழுப்புவதற்கு மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலர் தண்டனை பெற்றுள்ள போதிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருப்பார்களாயின் அவர்களுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கப் பெற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

71 0 0
இலங்கை செய்திகள்

அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக்…

48 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

92 0 0
இலங்கை செய்திகள்

கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு.!

யாழ்ப்பாணம் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் கழிவுகள் அழுகி, புழுக்கள் பெருகி கடும் துர்நாற்றம் வீசுவதால் பெரும் சிரமங்களை…

84 0 0