உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
70 பார்வைகள்

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்பில் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு ஆந்திரக் கடற்கரைக்கு மேல் நிலைகொண்டிருந்த தீவிர தாழமுக்கம் மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இந்தியாவின் கலிங்கப்பட்டினத்திற்கு தென்மேற்கே கரையை கடந்துள்ளது.

இன்று (24) வியாழக்கிழமை காலை 05:30 மணி நிலவரப்படி, காங்கேசந்துறையில் இருந்து சுமார் 1,100 கிலோமீற்றர் வடகிழக்கே, வட அட்சரேகை 18.3°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 83.7°E இல் நிலைகொண்டுள்ளது.

இதனால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினருக்கு மீண்டும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை வீசக்கூடும். கடல் பகுதிகள் கொந்தளிப்பாகவோ அல்லது அவ்வப்போது பலத்த சீற்றமாகவோ காணப்படும்.

குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளுக்குப் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீன்பிடி மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்குப் பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அப்பகுதியில் உள்ள படகுகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தாழமுக்கம் இந்தியக் கரையை கடந்த போதிலும், இதன் தாக்கத்தினால் ஏற்படும் தென்மேற்குப் பருவக்காற்று வலுவடைந்து காணப்படுவதால், நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…

75 0 0
இலங்கை செய்திகள்

கீரிமலை பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.!

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை…

65 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்.!

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போடரகம…

84 0 0
இலங்கை செய்திகள்

மொழிபெயர்க்க முயன்ற இளைஞன் மீது பொலிஸார் கொடூரத் தாக்குதல்.!

களவு நகை தொடர்பிலான விசாரணை ஒன்றின் போது, பொலிஸாருக்கு மொழிபெயர்த்து உதவ முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

89 0 0