உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாக செயற்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
145 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சாடியுள்ளார்.

அனோஜன் விவகாரம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
“இவ்விவகாரத்தில் சிறீதரன் எம்.பி பேசிய வார்த்தைகள் மிகவும் பாரதூரமானவை. அவர் ஒரு நாட்டின் சட்டதிட்டங்களைத் தெரிந்து பேசுகின்றாரா? அல்லது மந்த நிலையில் பேசுகின்றாரா? என்று தெரியவில்லை.

அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே கலவரம் உண்டாகும் என அச்ச நிலையைப் பரப்பி வருகின்றனர். இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.

கடந்த காலங்களில் இலங்கையிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலையில் கூட மரண தண்டனைக் கைதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போதுகூட சிங்கள – தமிழ் மக்களிடையே கலவரம் வரவில்லை. அவ்வளவு நல்லதொரு நாடுதான் இலங்கை. ஆனால், தமிழ் – முஸ்லிம் மக்களை வேண்டுமென்றே மோதவிடுவதற்காகத் தனது வக்கிர புத்தியுடன் இவர் இவ்வாறு கலவரம் ஏற்படும் எனக் குறிப்பிடுகின்றார். ஆகவே, அரசாங்கம் இவரது பேச்சுகள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நபிகள் நாயகம் மன்னிக்கும் குணம் கொண்டவர் எனப் பேசுகின்றனர். நிச்சயமாக நபிகள் நாயகம் மன்னிப்பின் சிகரம்தான், அவர் உயிருடன் இருந்திருந்தால் மன்னித்திருப்பார். ஆனால், இன்று நாட்டில் சட்டம் ஒன்று இருக்கின்றது. உதாரணமாக, பௌத்த நாடான இலங்கையில் கௌதம புத்தரை ஒருவர் விமர்சித்தால் அவர் மன்னிக்கப்படுவாரா? நிச்சயமாக இல்லை, அவர் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உணர்ச்சிவசப்படுவதே இதற்கெல்லாம் காரணமாகும். எனவே, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவைக் கெடுக்கும் வகையில் அரசியல்வாதிகள் பேசக் கூடாது.

தற்போது சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி குறித்து சவூதி அரேபியாவிற்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. அதனை எவரும் கெடுத்துவிடக் கூடாது. பல வருடங்கள் சவூதியில் வாழ்ந்தவன் என்ற ரீதியில் கூறுகின்றேன்; அது சாதாரண நாடல்ல, அங்கு ஆர்ப்பாட்டங்கள் செய்ய முடியாது. அந்த நாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை அந்நாடு விரும்புமா என்பதை யோசிக்க வேண்டும்.

இப் பிரச்சினைக்குக் கருணை மனுக்கள் மூலமே தீர்வு காண முடியுமே தவிர, ஆர்ப்பாட்டங்களாலோ கவனயீர்ப்பு போராட்டங்களாலோ பலனில்லை. அனோஜன் செய்தது சாதாரண குற்றமல்ல, முழு முஸ்லிம்களையும் காயப்படுத்திய குற்றமாகும். இருப்பினும், எமது நாட்டுப் பிரஜையான அனோஜன் பாதுகாப்பாக நாட்டிற்குத் திரும்பி வர வேண்டும் என்பதையே நாங்களும் விரும்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0