உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை.!

இலங்கை செய்திகள் 41 நிமிடங்கள் முன்
90 பார்வைகள்

நேற்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதேவேளை பல பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது.

கடும் மழை காரணமாக இப் பிரதேசத்தில் உள்ள அனைத்து நீர் ஓடைகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவில் வெள்ளம் பாய்கிறது. குறிப்பாக டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை, களனி கங்கை, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, மரே ஓயா, சாமிமலை ஓயா ஆகியவற்றில் அதிக அளவில் வெள்ளம் பாய்கிறது.

குறிப்பாக காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, லக்சபான நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப் பகுதிக்கு பொது மக்களை செல்ல வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 6 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது. கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4 அடி 11 அங்குலம் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 14 அங்குலம் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது. லக்சபான நீர் மின் நிலையம் நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு 2 அங்குலம் திறந்து விடப்பட்டு உள்ளது. விமல சுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் 2 அங்குலம் நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4அடி 11அங்குலம் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது. கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை இன்னும் 13 மீற்றர் நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.

நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான காலப்பகுதியில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 122 மில்லி மீற்றர் மழை பதிவாகி உள்ளது என நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

கன மழை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பண்ணையாளர்கள், விவசாயிகள். பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து வாகன சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது வாகனங்களில் உள்ள மின் குமிழ்களை மிளிர செய்து வாகனங்களை ஓட்டி செல்லுமாறும் வீதிகளில் வழுக்கும் தன்மை காணப்படுவதால் வாகனங்களை மிக மிக அவதானத்துடன் செலுத்த வேண்டும் என ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் உள்ளது. ஆகையால் மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாக செயற்பட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின்…

64 0 0
இலங்கை செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்; வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொ**லை;

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் தந்தை,…

76 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய…

79 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள்…

84 0 0