உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
25 வெள்ளி

இங்கிலாந்துத் தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க!

விளையாட்டுச் செய்திகள் 18 மணி நேரம் முன்
90 பார்வைகள்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க காயம் காரணமாக விலகி நாட்டிற்கு திரும்பவுள்ளார்.

முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் வலி காரணமாக அவர் அவதிப்பட்டு வருகிறார்.

இந்தக்காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹசரங்க விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற சச்சிந்து கொலம்பகே சிறப்பான அறிமுகத்தைப் பதிவு செய்தார்.

சச்சிந்து கொலம்பகே முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, ஹசரங்க இலங்கைக்குத் திரும்பி ஓய்வெடுத்து, ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள தொடருக்கு ஆயத்தமாகவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது. கடந்த மூன்று…

77 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக (Slow Over-rate) இலங்கை கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட்…

94 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம்

ஜப்பானின் நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டுப் பூங்காவில் இன்று (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்…

48 0 0
விளையாட்டுச் செய்திகள்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார். அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு…

27 0 0