உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பை வரவேற்கின்றோம்; பிரதான சூத்திரதாரிகளையும் சட்டத்தால் தண்டிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
73 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், “எய்தவன் இருக்க அம்பை நோவதேன்” என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும், உண்மையான மூளைக்காரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதிக் கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர் 24 பிரதிவாதிகளில் 15 பேருக்கு 220 வருடங்களுக்கு மேற்பட்ட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும், 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்தக் கொடூரத் தாக்குதல்களினால் 260 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர் என்றும், இதன் தாக்கம் இன்று வரை தொடர்கின்றது என்றும் சுட்டிக்காட்டிய அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.

தமிழில் வழங்கும் “எய்தவன் இருக்க அம்பை நோவதேன்” என்ற பழமொழியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஒப்பிட்ட ஸ்ரீநேசன் எம்.பி., இந்தத் தாக்குதலுக்கு அம்பாகவும் வில்லாகவும் (செயற்பாட்டாளர்களாகவும் உதவியாளர்களாகவும்) செயற்பட்டவர்களுக்கே தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆனால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எய்தவனான பிரதான சூத்திரதாரி யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்றும், பிரதான தரப்பினருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்போதே பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய…

74 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள்…

81 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாட்டுடன் மோதிய வாகனம்.!

திருகோணமலை, தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதிய விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்…

85 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை உடனடியாக மன்னித்து விடுவியுங்கள்.!

சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்…

68 0 0