உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 32 நிமிடங்கள் முன்
29 பார்வைகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய சீன நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநரான சந்தேகநபர், சீனாவில் கொள்வனவு செய்த புகையிலைப் பொருட்களுடன் மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக எயார் ஏஷியா விமான சேவைக்கு சொந்தமான AK-047 விமானத்தில் நேற்று (21) இரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதிகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத புகையிலைப் பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (22) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு…

23 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்டத்தில் பதக்கங்களை குவித்த வட்டு இந்துக் கல்லூரி.!

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ்.…

29 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல்கள் நடக்கும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.!

அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்…

32 0 0
இலங்கை செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி.!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான விவசாயிகள் முருங்கைச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். புன்னைநீராவி, கல்லாறு, பிரமந்தனாறு, மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் பலர் பல இலட்சம்…

30 0 0