உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அரசாங்கத்தின் ஊழல்கள் நடக்கும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
30 பார்வைகள்

அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்தார்.

கனிம எண்ணெய் வள அபிவிருத்தி குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எல்.என்.ஜி (LNG) இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது குறித்து கடந்த காலத்தில் எதிர்க்கட்சியினர் விமர்சித்த போதிலும், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசியல் பொய்களைக் கூறாமல் இந்தச் சட்டமூலத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளங்களிலிருந்து உண்மையான பிரயோஜனத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ,
அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஜனாதிபதி, நாடு பூராகவும் சென்று புதிய பொய்களைப் பரப்பி வருவதாகக் கூறினார்.

5G தொழில்நுட்பம் செயற்பாட்டில் இருக்கும் காலத்தில் 1,000 4G கோபுரங்களை அமைப்பதாகக் கூறுவதும், நிதி ஒதுக்கீடு கூட செய்யப்படாமல் 400 குளங்களைச் சீரமைப்பதாகக் கூறுவதும் மக்களுக்குச் செய்யும் ஏமாற்று வேலை எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் வேலையின்மை மற்றும் பொருளாதாரச் சரிவு குறித்து சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் காலத்தில் 35,000 பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை தருவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தரவுகளின்படி இலங்கையில் பட்டதாரிகளில் 43 சதவீதமானோருக்கு வேலை வாய்ப்பு இல்லை எனக் கூறினார்.

மேலும், தெற்காசியாவிலேயே வேலையின்மை தீவிரமாக உள்ள இடங்களில் ஒன்றாக இலங்கை மாறியுள்ளதாகவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ள அதேவேளை பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெறும் பல்வேறு ஊழல் சம்பவங்களின் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு மௌனம் காப்பதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை, அமைச்சைச் சேர்ந்த நிதிச் செயலாளர் தவறான கணக்குக்கு 2.5 மில்லியன் டொலர்களை அனுப்பியமை, 1 பில்லியன் டொலர் அளவுக்குக் கறுப்புப் பணம் வெளியேற்றப்பட்டமை மற்றும் விவசாயிகளுக்குக் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணம் வழங்கப்படாமை போன்ற பல விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் நஷ்டஈடுகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும், அவசர கொள்முதல் என்ற பெயரில் தரம் குறைந்த நிலக்கரிகள் இறக்குமதி செய்யப்பட்டு நிதி முறைகேடுகள் நடப்பதாகவும் சாடினார்.

எனவே, அரசாங்கம் கடந்து சென்ற இரண்டு ஆண்டுகளைக் கொண்டாடுவதை விடுத்து, மக்களுக்கு அளித்த பழைய வாக்குறுதிகளை நிறைவேற்றி உண்மையாக உழைக்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை…

27 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்டத்தில் பதக்கங்களை குவித்த வட்டு இந்துக் கல்லூரி.!

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ்.…

27 0 0
இலங்கை செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி.!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான விவசாயிகள் முருங்கைச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். புன்னைநீராவி, கல்லாறு, பிரமந்தனாறு, மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் பலர் பல இலட்சம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பத்தரமுல்லே சீலரத்ன தேரர்.!

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று…

18 0 0