உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

நுவரெலியாவில் படகுச் சவாரி நிறுத்தம்.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
24 பார்வைகள்

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகுச் சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, அவ்விடம் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் சுற்றுலாத்தலங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் படகில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

நுவரெலியாவில் அடை மழை பெய்துவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவுவதால் நுவரெலியா, கிரகரி வாவியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

அறிவித்தல் விடுக்கப்படும்வரை படகுசவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் படகுச் சவாரி பாதிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என படகு சேவையை வழங்குபவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழு, சமூக உளநலம், போதை தடுப்பு மன்றக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக…

16 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்.!

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப…

28 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்…

16 0 0
இலங்கை செய்திகள்

கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது.…

23 0 0