உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
25 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிவராசா அனோஜன் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக் கூடிய இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

இளைஞரின் உயிரைப் பாதுகாப்பதற்காக எடுக்கக்கூடிய எதிர்கால நடவடிக்கைகளை உடனடியாகத் துரிதப்படுத்துவதுடன், சவூதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவசியமான இராஜதந்திரத் தலையீடுகளை மேற்கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் அரசு எப்போதும் சிறப்பு கவனம் செலுத்துவதை வலியுறுத்திய ஜனாதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கலந்துரையாடலில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க ஆகியோருடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் படகுச் சவாரி நிறுத்தம்.!

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகுச் சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில்…

22 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்…

14 0 0
இலங்கை செய்திகள்

கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது.…

21 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது.!

முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால்…

18 0 0