உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அநுரவின் கடந்த இரண்டு வருட ஆட்சி தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமே.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
25 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கடந்த இரண்டு வருட ஆட்சி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றமே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.

சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் ஆட்சியைப் பிடித்த பின்னரும் தமிழ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தார்.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

அந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வியையே பலரும் முன்வைத்துள்ளனர்.

இவ்வாறாகத் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது.

எனவேதான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் சொல்கிறோம், நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்களே விரைந்து நிறைவேற்றுங்கள். இல்லையேல், உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்…

13 0 0
இலங்கை செய்திகள்

கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது.…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட…

23 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது.!

முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால்…

18 0 0