உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜன் விவகாரம் இன்று நாடாளுமன்றில்.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
29 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

சவூதி அரேபியாவில் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டுள்ள அனோஜனின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றி விசேட அறிக்கை ஒன்றைத் தான் வெளியிடவுள்ளார் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனோஜன் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களது மகனின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் நேற்று அவர்கள் சந்தித்து மேற்படி கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

17 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

25 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

18 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

26 0 0