உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

அனோஜனிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை!

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
15 பார்வைகள்

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, சவூதி ஊடகங்களோ அல்லது அங்குள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரையில் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என இலங்கை உலமா கட்சியின் தலைவரும் முப்தியுமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சவூதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும், சவூதி பத்திரிகைகளில் அரசு அதனை வெளியிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை அப்படியே நம்பி செயற்படுவதற்குப் பதிலாக உண்மையைக் கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

“சவூதி அரேபியா சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாகும். மன்னர் பைசலை படுகொலை செய்த சவூதி அரச குடும்பத்து இளவரசனுக்கே அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும் சவூதி பொருட்படுத்தவில்லை.

அங்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டால் அடுத்த வாரமே பத்திரிகைகளில் அரசு அறிவிக்கும். ஆனால், அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறான சூழலில், அனைவரும் சேர்ந்து அதிகளவில் சத்தமிடுவது விபரீதமான முடிவுகளுக்கே வழிவகுக்கக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அண்மையில் கதிர்காமத்திற்குச் சென்ற நாயை உதைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட ஏழைப் பெட்டிக்கடைக்காரனின் சம்பவத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, மனிதர்களின் சுயநலப் போக்கை விமர்சித்துள்ளார்:

“தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட போதிலும், அந்த ஏழைப் பெட்டிக்கடைக்காரன் கைது செய்யப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் பிணை கட்டியே வெளிவந்துள்ளான். அவனது குடும்பம் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படும் நிலையில், எந்தவொரு தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது சிவில் அமைப்புகளோ அவனது வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறவில்லை.

மன்னிப்புப் பற்றிப் பேசுபவர்கள் அந்த ஏழையை மன்னிக்க முன்வரவில்லை. மனிதர்கள் பொதுவாகத் தனக்கு ஆபத்து என்றால் சகிப்பதில்லை, மற்றவனுக்கு ஆபத்து என்றால் சந்தோஷப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன், நாயை உதைத்த சம்பவத்தை வைத்து இனவாதத்தைப் பேசி இனங்களிடையே கசப்புணர்வை உருவாக்கியவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை எனக் சுட்டிக்காட்டிய அவர், இனியாவது இனவாதம் மற்றும் மதவாதங்களை ஒழித்து மனிதாபிமானத்தை வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா…

26 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி…

22 0 0
இலங்கை செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அறிவுறுத்தல்

அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய…

22 0 0
இலங்கை செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.…

26 0 0