உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
23 பார்வைகள்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி முஹைத்தீன் பாத்திமா நஸ்கா அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு அண்மையில் ஆஸாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பரிசுத்த அல்-குர்ஆனை முழுமையாக மனனம் செய்து, இம்மத்ரஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது ஹாபிழாவாக வெளியான அல்-ஹாபிழா பாத்திமா நஸ்காவின் இச்சாதனையைப் பாராட்டி, பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் சார்பில் 50,000 ரூபாய் பொற்கிழியும் பாராட்டு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை, குர்ஆனை மனனம் செய்யும் புனிதப் பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளில் பயின்று வரும் முஹம்மது ஹனீபா நப்ரிஸா மற்றும் முஹம்மது சபீல் ஸஹ்மத் ஜினா ஆகிய மாணவிகளுக்கும் அவர்களின் கல்வி முன்னேற்றத்தைப் பாராட்டிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், ஹாபிழாக்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் வழிகாட்டி வரும் பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவின் அதிபர் என்.எப் பர்ஹத் பாதிமி மற்றும் ஆண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவின் ஆசிரியர் அல்-ஹாபிழ் மௌலவி முஹம்மத் தன்ஸீம் கௌஸி ஆகியோருக்கும் அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டிப் பொற்கிழிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், மத்ரஸா ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன், மாணவிகளின் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென முற்றிலும் இலவசமாக இப் பகுதி நேர ஹிப்ழ் வகுப்புகள் நடாத்தப்பட்டு வருவதோடு, ஆர்வமுள்ள பெற்றோர்கள் பள்ளிவாசல் காரியாலயத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுத் தமது பிள்ளைகளை இணைத்துக் கொள்ள முடியும் எனப் பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பாடசாலைகளுக்கு இன்று (21) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை!

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு…

15 0 0
இலங்கை செய்திகள்

அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அறிவுறுத்தல்

அந்தமான் தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் காரணமாக எதிர்வரும் சில நாட்களில் குறித்த கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாகவும், பலத்த காற்றுடனும் காணப்படக்கூடிய…

23 0 0
இலங்கை செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.…

26 0 0