உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு : மாநகர சபை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக மக்கள் குற்றச்சாட்டு!

இலங்கை செய்திகள் 48 நிமிடங்கள் முன்
26 பார்வைகள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் மந்தகதியிலேயே செயற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இரவு பகல் பாராது சுமார் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் கல்முனை நகரிலும் பொதுச்சந்தை வளாகத்திலும் கூட்டமாக உலவி வருகின்றன. இதனால் அன்றாடப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொடர்ச்சியாக வீதி விபத்துகளும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

கட்டாக்காலியாக அலைய விடப்பட்டுள்ள மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் வீடுகளிலோ அல்லது பண்ணைகளிலோ கட்டி வைத்துப் பராமரிக்க வேண்டும் என மாநகர சபையினால் ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாட்டின் உரிமையாளர்கள் அதனைப் பொருட்படுத்தாததால் அந்த அறிவித்தல் பயனற்றதாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அண்மையில் கூட, வீதியில் திரிந்த கட்டாக்காலி மாடு முட்டியதில் ஊடகவியலாளர் ஒருவர் உட்படப் பொதுமக்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையினால் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு, மாநகர சபைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்போது மாட்டின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தித் தமது மாடுகளை மீட்டுச் சென்றிருந்தனர்.

எனினும், தற்போது தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவான மாடுகள் பொதுச்சந்தைக்குள் புகுந்து வியாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கல்முனை மாநகர சபை எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாகக் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேசவாசிகள் மீண்டும் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக செப்டம்பர் 24ல் கொழும்பில் பிரம்மாண்ட போராட்டம்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.…

19 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் பிரமாண்டமாக இடம் பெற்று நிறைவடைந்த MSPL-2026: மென்பந்து கிரிக்கெட் திருவிழா!

மன்னாரில் AA Sports நிறுவனத்தின் முழுமையான அனுசரணையில், அதன் நிறுவனர் அமல்ராஜன் தலைமையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட Mannar Soft Ball Premier League – MSPL-2026 தொடரின்…

9 0 0
இலங்கை செய்திகள்

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் (20) கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுண் மதிக்கத்தக்க…

23 0 0
இலங்கை செய்திகள்

கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம் – முதல்வர் குற்றச்சாட்டு!

கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாக பிரச்சினையே காரணம் என முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார். கல்லூண்டாய் குப்பை மேட்டினை பார்வையிட்ட பின்னர்…

30 0 0