உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

தற்போதைய ஆட்சியில் மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழும் நிலை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
23 பார்வைகள்

தற்போதைய அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது டெங்குத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனநாயகத்துக்கான சமூக ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய அரசு பதவியேற்ற காலப்பகுதியில் இருந்து மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவம் போன்று அல்லாமல், இன்று நாளாந்தம் யாருக்குத் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்ற அச்சத்துடன் சிந்திக்க வைக்கும் அளவுக்குத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியையும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலகட்டத்தையும் விடவும் அதிகமான அளவிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்போதைய ஆட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளன.

இந்த ஆட்சியில் மக்களை எவ்வாறு வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்ச நிலை உருவாகியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

23 0 0
இலங்கை செய்திகள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய…

23 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முதன்மைத் துப்பாக்கிதாரி உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

20 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்.!

“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை…

19 0 0