உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

புதிய அரசமைப்பு வந்தால் நிபந்தனையற்ற ஆதரவு.!

இலங்கை செய்திகள் 55 நிமிடங்கள் முன்
13 பார்வைகள்

இலங்கையின் அரசமைப்பில் தொடர்ச்சியாகத் திருத்தங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான செயற்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்தால், தான் அரசுக்கு வெளியே இருந்துகொண்டு அதற்கு முழுமையான ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றார் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 22ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.

எனினும், நீதிமன்றத்தின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசைச் சேர்ந்த சிலர் அது குறித்த கருத்துக்களை வெளியிட்டிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் கூறாவிட்டாலும், இத்தகைய முற்கூட்டிய கசிவுகள் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியமானது.

இலங்கைக்கு அவ்வப்போது திருத்தங்களை மேற்கொள்ளும் அரசமைப்புச் சட்டங்கள் தேவையில்லை. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண புதிய அரசமைப்பு ஒன்றே அவசியமானது.

அரசமைப்பு என்பது ஓர் அரசின் அல்லது அரசியல் கட்சியின் தேவைக்காக உருவாக்கப்படக் கூடாது. நாட்டின் எதிர்காலத்தையும் அனைத்து மக்களினது உரிமைகளையும் கருத்தில்கொண்டே அது தயாரிக்கப்பட வேண்டும்.

நாட்டுக்குத் தேவையான இந்த அரசமைப்பு மாற்றத்தைக் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கும் பட்சத்தில், நான் அரசுக்கு வெளியே இருந்தாலும் அதற்கு எவ்வித தயக்கமுமின்றி ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற கட்சி பேதமின்றி சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்…

5 0 0
இலங்கை செய்திகள்

இரு வருட ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.!

ஜனநாயகத்தை இல்லாதொழித்துவிட்டு ஒரு நாடாக எவராலும் முன்னேற்றமடைய முடியாது எனவும், தனது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகத் எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி…

21 0 0
இலங்கை செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை.!

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய…

18 0 0
இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. கைது.!

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல்…

25 0 0