உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.09.2026

ராசி பலன்கள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்க பேச்சுவார்த்தைகளும் நடக்கும். மனபாரம் குறையும். பெரியவர்களுடைய ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனக்கவலை இருக்கும். சோர்வாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. சின்னச் சின்ன பின்னடைவுகள் வரலாம். இருந்தாலும் முயற்சிகளை கை விடக்கூடாது. இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக பயம் பதட்டம் வெளிப்படும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். குடும்ப உறவுகளோடு சிக்கல்கள் வரலாம். நண்பர்களிடம் பேசும்போது கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். அவசரத்தில் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். மனதிற்கு பிடித்த விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரை கை பிடிக்கக்கூடிய நல்ல நேரம் கை கூடிவரும். புரட்டாசி முடிந்ததும் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்க பேச்சுவார்த்தை நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். முன்கோபம் வரும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கை நழுவ விடக்கூடாது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் போராட்டங்கள் இருக்கும். உறவுகளுக்குள் பிரச்சினை வரலாம். புது முடிவுகள் எடுக்கும் போது பிரச்சினைகள் வரலாம். கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், தேவையான அளவு ஓய்வு என்று இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வயதானவர்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு நல்லதொரு வழி கிடைக்கும். புதிய சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம். தங்கம் வாங்கும் யோகம் இருக்கு சொத்து சுகம் சேரக்கூடிய நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிக்கல்கள் சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையில் வியாபாரத்திலும் நிதானம் தேவை. அவசர முடிவு எடுக்கக் கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. உடல் பருமனாக இருப்பவர்கள் கட்டாயம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புது வாய்ப்புகள் வீடு தேடி வரும். இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, நீங்கள் தங்கி இருக்கும் வீடாக இருந்தாலும் சரி அதில் ஒரு சின்ன மாற்றம் வரும். நன்மை நடக்கக்கூடிய மாற்றம் தான். இறை வழிபாடு செய்யுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய வாயால் தான் பிரச்சினைகள் வரும். அனாவசியமாக பேசுவதை குறைத்து கொள்ளுங்கள். ஈகோவை குறைத்துக் கொள்ளுங்கள். அனுசரித்து சென்றால் எந்த பிரச்சினையும் கிடையாது. சிவசிவ என்று சொல்லிக் கொண்டே இருங்கள் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத நண்பர்கள் உறவுகளிடம் இருந்து விலகி நிற்பது…

38 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய அனுபவங்களும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து…

44 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாக இருக்கும். மன கவலையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று தொட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்கால சேமிப்புக்கு…

60 0 0