உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

இன்றைய ராசி பலன்கள் – 19.09.2026

ராசி பலன்கள் 5 மணி நேரம் முன்
10 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத நண்பர்கள் உறவுகளிடம் இருந்து விலகி நிற்பது நல்லது. சண்டை சச்சரவுகளுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். சின்ன டென்ஷன் இருக்கும். பதற்றத்தினால் செய்யும் வேலையில் சின்னச் சின்ன தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. புது முடிவுகள் எடுக்கும் போது உஷாராக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கவலையான நாளாக இருக்கும். தேவையில்லாத சிந்தனையால் பாதி நேரம் வீணாகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் செலுத்த முடியாது. புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகள் வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய வேலையில் மன திருப்தி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை சுமூகமான போக்கு நிலவும். இலாபம் சீராக கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் வெளிப்படும். பணிவோடு நடந்து கொள்வீர்கள். நன்றி கடன் செலுத்துவீர்கள். நீண்ட நாள் மனதில் இருந்த பகை விலகும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சீராகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் சரியாகும். புது வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு அமைதியை தரும். சின்னச் சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று கைநிறைய இலாபம் எடுத்து இருப்பீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். தேவையில்லாத சிந்தனையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகளை மன்னிப்பீர்கள் நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். வேலைகளில் சின்னதாக பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. புது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளிப்படையாக மூன்றாவது நபரிடம் சொல்ல வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். காரிய தடை விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். புது உறவுகளால் இரட்டிப்பு சந்தோஷம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பக்குவம் வெளிப்படும் நாளாக இருக்கும். நல்லது கெட்டதை புரிந்து நடந்து கொள்வீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். இதுநாள் வரை நீங்கள் அறியாமல் செய்த தவறை எண்ணி வருத்தப்படுவீர்கள். வெளிப்படையாக பேசி மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் இருந்த மிகப்பெரிய பாரம் குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சில பேருக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இறை நம்பிக்கை மனதிற்கு நிம்மதியை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய அனுபவங்களும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து…

35 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாக இருக்கும். மன கவலையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.…

44 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று தொட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்கால சேமிப்புக்கு…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முழு நம்பிக்கை இல்லாமல் புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமையை கையாள்வது அவசியம். அவசர முடிவுகள் எடுக்கக்…

53 0 0