உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
26 பார்வைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்களின் நிர்வாகிகளால் தமிழக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பள்ளிவாசலின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், முஸ்லிம் காங்கிரஸின் வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் முன்னாள் முதல்வருமான சிராஷ் மீராசாஹிப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், தமிழகத்திலிருந்து அமைச்சர் ஷாஜஹானுடன் வருகை தந்த சிறப்புத் தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தபோது 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்குமாரியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

20 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்.!

கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள…

23 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருட்களுடன் இருவர் கைது.!

வெல்லம்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலன்னாவை…

21 0 0
இலங்கை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

23 0 0