உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

இன்றைய ராசி பலன்கள் – 16.09.2026

ராசி பலன்கள் 6 மணி நேரம் முன்
31 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று தொட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடுங்கள். புது வியாபாரம் தொடங்குவது, புது வேலைக்கு முயற்சி செய்வது போன்ற நல்ல விஷயங்களை இன்று செய்தால் மென்மேலும் முன்னேற்றம் அடையும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்க கூடிய பக்குவம் தேவை. வேகத்தை விட விவேகம் தான் அவசியம் தேவைப்படுகிறது. இறைவழிபாடு செய்யுங்கள். நிதானத்தோடு செயல்படுங்கள். வரும் பிரச்சினைகளை துணிவோடு எதிர்கொண்டால் வெற்றி உங்களுக்கே.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். உங்களுடைய கடமையில் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். நிதிநிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று மன தைரியத்தோடு இருக்க வேண்டும். சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கண்டு பயந்து துவண்டு போகக்கூடாது. போராடக் கூடிய மனப்பக்குவம் தேவை. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கணும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு விஷயத்திலும் அதீத நம்பிக்கை வைக்காதீர்கள். உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம், நல்ல அனுபவத்தை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்காதீர்கள். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தை மூன்றாவது நபரிடம் அனாவசியமாக பேச வேண்டாம். இன்று நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிக்கலாம். செய்யும் வேலையில் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை கூடுமானவரை தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒருவரை பற்றி இன்னொருவரிடம் குறை கூறும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். காரிய தடை விலகும். வீண்விரய செலவுகள் குறையும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். தேவை இல்லாத டென்ஷன் குறையும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட தூரம் வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பல நாள் டென்ஷன் குறையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். உணவு பழக்கவழக்கத்தில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முழு நம்பிக்கை இல்லாமல் புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமையை கையாள்வது அவசியம். அவசர முடிவுகள் எடுக்கக்…

39 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. நல்ல…

46 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.…

26 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 11.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் பிரச்சினைகள் தீரும். உங்கள் மனம் தெளிவாக சிந்திக்கும். தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையில்…

189 0 0