உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

இன்றைய ராசி பலன்கள் – 15.09.2026

ராசி பலன்கள் 6 மணி நேரம் முன்
34 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முழு நம்பிக்கை இல்லாமல் புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமையை கையாள்வது அவசியம். அவசர முடிவுகள் எடுக்கக் கூடாது. இன்று இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். குறிப்பாக முருகனை வழிபாடு செய்து விட்டு உங்கள் வேலையை தொடங்குங்கள். நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கும். மனக்கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. இருந்தாலும் கவலை வேண்டாம். இறை நம்பிக்கையோடு உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. முக்கியமான வேலைகள் இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது நல்லது. கடமை பொறுப்புணர்ச்சியில் இருந்து விலகாமல் நடந்து கொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். செய்யும் வேலையில் நேர்மையோடு நடந்து கொள்வீர்கள். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நீங்கள் செய்த செயலுக்கு உண்டான பாராட்டு கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக ஒரு பதட்டம் இருக்கும். மன பயம் இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது தடுமாற்றம் வரும். கூடுமானவரை புது முயற்சிகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களாலேயே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை மோசமாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிந்தித்து கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று. இறை நம்பிக்கை வையுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மனக்குழப்பம் தீரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முருகர் வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் சுப செலவை ஏற்படுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. புது முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். எதிர்ப்புகள் போராட்டங்களை கடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உடன் இருப்பவர்களாலேயே பிரச்சினை வரலாம். கவனமாக செயல்படவும். முன்கோபம் வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் இந்த நாள் பெருசாக பிரச்சினை இல்லை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. கையை விட்டுப் போன நிறைய நல்ல விஷயங்கள் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் அனாவசிய செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். நண்பர்களோடு ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது அக்கறை வைத்திருப்பவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கவும். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுயநலமாக சிந்தித்து செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்வுதான். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வுக்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவாக வாய்ப்பு உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. நல்ல…

45 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.…

23 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 11.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் பிரச்சினைகள் தீரும். உங்கள் மனம் தெளிவாக சிந்திக்கும். தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையில்…

183 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு கூட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளது. இளைஞர்களுக்கு இன்று ரொம்பவும்…

163 0 0