உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 31.08.2026

ராசி பலன்கள் 1 மணி நேரம் முன்
48 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய தேவைகளை, தேவையான நேரத்தில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். புது அனுபவங்கள் புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கல்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் தேவைப்படுகிறது. சின்னச் சின்ன பிரச்சினைகளை கண்டு துவண்டு போகாதீர்கள். பெரிய அளவில் பூகம்பமே வந்தாலும் அசராமல் அதை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்க வேண்டும். இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகளை கையில் எடுக்கும் போது அலட்சியம் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சிக்கல்கள் வந்து போகலாம். இருந்தாலும் விடா முயற்சி எடுக்கும்போது சிக்கல்களில் இருந்து சுலபமாக விடுபட முடியும். உங்களுக்கான திறமை வெளிப்பட வேண்டும் என்றால், இன்று நீங்கள் கொஞ்சம் கூடுதல் உழைப்பை முதலீடாக போட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிரிந்த உறவுகளோடு மீண்டும் சேருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கு உதவி செய்ய நிறைய பேர் வருவார்கள். சக மனிதர்களுடைய அருமை பெருமைகளை இன்று தெரிந்து கொள்ளக்கூடிய நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபமான நாளாக இருக்கும். எதிர்கால சேமிப்புக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். நிச்சயம் நல்லது நடக்கும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். உங்களுக்கு பிரச்சினை கொடுத்து வந்திருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். மன நிம்மதி அடைவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னதாக மன பயம் இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூட மாட்டீர்கள். நிறைய விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்வதால், உங்களுடைய வேலையில் சின்ன பின்னடைவு வரலாம். மனம் விட்டு பேசுங்கள். தைரியமாக செயல்படுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தால் நிறைய நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். தேவையில்லாத கெட்ட பழக்கவழக்கங்களை விட்டு விடுங்கள். மாணவர்கள் கூடாத நட்பில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. உடல் சோர்வினால் தாமதங்கள் வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால், தேவையான அளவு ஓய்வு எடுப்பது நல்லது. மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு. ஜாக்கிரதையா இருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கும் போது, அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குறிப்பாக இளைஞர்கள் அடம்பிடித்து இன்று எந்த ஒரு வேலையும் செய்யாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூடிய நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். காரிய தடை விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். இறைவனின் பரிபூரண அருள் நிறைந்த நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் இருக்கும். புதிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் வரும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈகோ பார்க்காதீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பக்குவம் தேவை. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன் இருக்கும் விரிசலை அதிகப்படுத்தி கொள்ள வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுய நலமான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் மட்டும் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்ட…

70 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். உங்கள் மீது விழுந்த பழி விலகும். மனதில் நிம்மதி பிறக்கும். குடும்ப ஒற்றுமை…

76 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 27.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் துணிச்சல் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய…

90 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை எல்லாம் பூர்த்தி…

96 0 0