உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 27.08.2026

ராசி பலன்கள் 2 மணி நேரம் முன்
57 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் துணிச்சல் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். இருந்தாலும் மனபாரம் குறையும். மனது லேசாகும். சின்னச் சின்ன எதிரிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீர்கள் இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு இருக்கு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்கள் வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை சரியான முடிவு செய்து தேர்வு செய்வீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப காரிய தடை விலகும். கெட்டி மேல சத்தம் கேட்பதற்கு உண்டான அத்தனை வேலைகளும் தொடங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சுப காரிய விருத்தி இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலையில் ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி உண்டு. தீரா பகை விலகும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக மன பயம் இருக்கும். எப்பவோ செய்த தவறுகளுக்கான தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. யாரிடமாவது பொய் சொல்லி இருந்தாலோ, அல்லது உண்மைக்கு புறம்பான காரியத்தை செய்திருந்தாலும் அந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அரசுக்கு புறமான காரியங்களை செய்ய வேண்டாம். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டாம் ஜாக்கிரதை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. முன்கோபம் வேண்டாம். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு ஏதாவது இன்டர்வியூ இருந்தா, அதில் திறமையாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள் நல்லது நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத பொருட்களை எக்காரணத்தை கொண்டும் வாங்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனமாக இருக்க வேண்டும். முன்கோபம் வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்தையும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை மூன்றாவது நபரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய கடமைகளை நீங்களே செய்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் பிறக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை கூட கையில் எடுத்தால் இன்று முடித்து விடலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளும் தடைபடாமல் நடக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். மன நிம்மதி கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை எல்லாம் பூர்த்தி…

70 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வீட்டின் தேவைகளை எல்லாம் பூர்த்தி…

72 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் நிதானம்…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படக் கூடிய நாளாக இருக்கும். பேச்சில் சந்தோஷம் இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப…

88 0 0