உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

ராசி பலன்கள் 5 நாட்கள் முன்
93 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும். தீராத பிரச்சினையை தீர்த்து வைக்க, தேவையான பஞ்சாயத்தை இன்று வைத்துக் கொள்ளுங்கள். குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். சந்தோஷத்தில் கடமையை மறந்துவிடக்கூடாது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமான நாளாக இருக்கும். பலதரப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதை துணிச்சலோடு எதிர்கொள்வீர்கள். பணிவோடு நடந்து கொள்வீர்கள். எதிரிகளோடு பிரச்சினை செய்ய மாட்டீர்கள். நல்ல பக்குவம் கிடைக்கும் நாள் இன்று. இறைவழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கூடுதல் கவனம் தேவை. சின்ன சின்ன மறதியால் வேலைகள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. நேரத்தை வீணடிக்காதீர்கள். செய்ய வேண்டிய வேலையை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செய்ய தொடங்கி விடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். புரிதல் உண்டாக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். நீண்ட தூர பயணங்களால் மனநிறைவு அடைவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். நீண்ட தூர பயணங்களின் போது வண்டி வாகனம் ஓட்டும் போது கவனமாக செயல்படுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். பெருமையாக உங்களுடைய காலரை தூக்கி விட்டுக்கொண்டு தலைநிமிர்ந்து நடக்கலாம். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ, அதே இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுங்கள். சொந்தபந்தங்களோடு தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். கேட்காமலேயே உபசரனை உங்கள் வீடு தேடி வரும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேறும். மனப்பாரம் குறையும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு டென்ஷன் குறையும். வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பல நாள் டென்ஷன் குறையும். தேவைக்கு ஏற்ப ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் சௌகரியமான நாளாக இருக்கப் போகிறது. மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லலாம். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு இருக்க வேண்டும். கவனக்குறைவாக எந்த ஒரு வேலையும் கையில் எடுக்காதீர்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். சொத்து பிரச்சினைகளை கூடுமானவரை நாளை தள்ளி வைத்துக் கொள்ளவும். தேவையில்லாத பஞ்சாயத்துகளை இன்றைக்கு கூட்ட வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கும். உயர் அதிகாரிகளுடன் போராட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். விடுமுறை நாளை சில பேருக்கு சந்தோஷமாக எடுத்துச் செல்ல முடியாது. சில பேருக்கு பண பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இறை நம்பிக்கையோடு இருங்கள். இயலாத விஷயங்களை, இன்று செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

72 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் முழுவதும் தலைக்கு மேல் வேலை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உழைப்பு உழைப்பு என்று நேரம் போவதே தெரியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக…

93 1 0