உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 11.08.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
106 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று தைரியமாக செயல்படுவீர்கள். துணிச்சலோடு பேசுவீர்கள். மனதில் வைத்திருந்த அத்தனை விஷயங்களையும் வெளிப்படுத்துவீர்கள். மனபாரம் குறையும். சொந்த பந்தங்களோடு இருந்து வந்து கருத்து வேறுபாடுகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். முன்பின் தெரியாத நபருக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். ஐயோ பாவம் என்று நீங்கள் செய்யும் உதவி நாளை உங்களுக்கு பிரச்சினையாக வந்து முடிய வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். தேவையில்லாத டென்ஷன் குறையும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை தரும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. நிதானத்தோடு இருங்கள். பிரச்சினைகளை பேசி பேசி பெருசாக்க வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று யோகக்காரர்களாக இருப்பீர்கள். உங்களுக்கான அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகிறது. வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மைகள் நடக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். துன்பம் உங்களை நெருங்குவதற்கான சின்ன சந்தர்ப்பம் இருக்கிறது. கவனமாக செயல்பட வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உஷாராக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு வெளிபடும். உற்சாகமாக உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். நல்ல பெயர் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. பொறுமையை இழந்து நீங்கள் செய்யும் வேலை பெரிய அளவில் பாதிப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை மறக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் உறவுகளை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வரும். பேச்சில் நிதானம் இருக்காது. இதனால் நிறைய நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கவனம் இருக்கட்டும். நண்பர்களோடு பேசும்போதும் கவனம் இருக்கட்டும். கூடுமானவரை இன்று மௌன விரதமாக இருங்கள். இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த நாளை கலந்து செல்லுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். அமைதியாக இருந்து நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். எதிரி பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். பேச்சில் தெளிவு இருக்கும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். உங்களைப் பார்க்கும்போது அடுத்தவர்களுக்கு, உங்களைப் போல வாழ வேண்டும் என்று எண்ணம் வரும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு வெளிப்படும். உங்களுடைய சீரான கடமையானது, சீராக தொடங்கக்கூடிய நாளாக இருக்கும். முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். காரிய தடை விளக்கும். நீண்ட தூர பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடப்பது நல்லது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

91 0 0