உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 05.08.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
103 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தீரும். நீண்ட நாள் வராத கடன் வசூலாகும். உங்களுடைய கடன் சார்ந்த தொந்தரவிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். வீட்டில் கெட்டி மேல சத்தம் கேட்பதற்கு, பேச்சு வார்த்தைகள் நடக்கும். வேலையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்தாலும் அதை உடனடியாக, உங்கள் திறமையால் சரி செய்து விடுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இலாபம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வேலையில் நிம்மதி கிடைக்கும். சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். வியாபாரத்தை பொறுத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு இருக்கும். இருந்தாலும் பெருசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும்‌. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத வரவு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானதோடு இருப்பீர்கள். சிந்தித்து செயல்படுவீர்கள். பக்குவத்தோடு நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலையில் நீண்ட நாட்களாக உங்கள் மீது விழுந்திருந்த கெட்ட பெயர் விலகும். வீண் பழியிலிருந்து விலகுவீர்கள். மனதில் இருந்த மிகப்பெரிய பாரம் குறையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட வேண்டும். முன்பின் தெரியாத நபர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனகசப்பு நீங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை சின்னச் சின்ன சிக்கல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை இருக்கும். மனதிற்கு பிடிக்காத சில விஷயங்கள் நடக்கும். சங்கடத்தோடு தான் இந்த நாள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் மனதை தளர விடக்கூடாது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து அன்றாட வேலையில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். எல்லா வேலைகளையும் குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாது. உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சின்ன சின்ன தவறுகள் நடக்கலாம். கவனமாக செயல்படுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரை முழுசாக நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் சிறிது பின்னடைவு வரலாம். பெருசாக பாதிப்புகள் கிடையாது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் என்று துணிச்சலாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். கையில் இருக்கும் பணம் வீண் விரையம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது கவனமாக இருக்கவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0