உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 03.08.2026

ராசி பலன்கள் 2 வாரங்கள் முன்
97 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய, நல்ல புது அனுபவங்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். மனதில் இருந்த பெரிய பாரம் குறையும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டாகும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். இலாபம் அதிகரிக்கும். வேலையில் நிதானம் தேவை. உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் விரைய செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய வேலைகளை நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த ஒரு விஷயம் இன்று நல்லதொரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். காரிய தடை விலகும். நிதிநிலைமை சீராகும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். விருந்தாளிகளின் வருகையால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகமாக இருக்கும். இருப்பினும் இன்று நேரம் போவதே தெரியாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வீர்கள். பிரமோஷனுக்கு உங்களுடைய பெயர் தெரிவு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் இருக்கட்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. கோபத்தால் நல்ல விஷயங்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்வது நல்லது. புது எதிரிகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய நண்பர்களை இழக்காமல் இருக்க வேண்டும். நிதானம் இன்று நிச்சயம் தேவை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கையில் எடுத்த காரியம் எல்லாம் உடனடியாக வெற்றி அடையாது. காரிய தடை வரலாம். முக்கியமான வேலையை செய்வதாக இருந்தால் விநாயகரை ஒருமுறை வழிபாடு செய்து விட்டு, அவருக்கு ஒரு சித்திர தேங்காய் உடைத்து விட்டு உங்களுடைய நல்ல காரியத்தை தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. தேவை இல்லாத பஞ்சாயத்து சண்டை சச்சரவுகளில் தலையிட வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும். இறைவழிபாடு செய்யவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாள். பெருமையான நாள். வெற்றிவாகை சுடக் கூடிய நாள். நிதிநிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். உறவுகளோடு இருந்து வந்த மனஸ்தாபம் சரியாகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். பயணங்களால் நன்மை ஏற்படும். புது அனுபவங்கள் கிடைக்கும். நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0