உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவிப்பு!

88 பார்வைகள்

இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த துடுப்பாட்டவீரரும் முன்னாள் துணைத் தலைவருமான அஜிங்கிய ரஹானே, சர்வதேசக் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதாகும் ரஹானே, தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி பதிவின் மூலம் இந்த ஓய்வு முடிவை உறுதிப்படுத்தியுள்ளார்.

“வாழ்க்கையில் தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்றும் ஒன்று இருக்கும்; சரியான நேரத்தில் விலகுவதே முறையானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 5,077 ஓட்டங்களையும், 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் உட்பட 2,962 ஓட்டங்களையும், 20 இருபது20 போட்டிகளில் 375 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.

2020-2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், இந்திய அணி பல முன்னணி வீரர்கள் இன்றித் தவித்த போது, அணியை வழிநடத்தி 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியைக் கைப்பற்றிக் கொடுத்தவர் ரஹானே என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0