உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 22.07.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
110 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம், வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்யுங்கள். சம்பள உயர்வோடு நல்லது நடக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பின்னடைவு வராது. உடன் இருப்பவர்களோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாதம் சரியாகும். கடன் சுமை குறையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறை இருக்காது. தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். வங்கி கடன் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். இறைவழிபாடு மனதிற்கு அமைதி தரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையான செலவாக தான் இருக்கும். கவலைப்படாதீர்கள், வருமானத்தை அதிகரிக்க கடவுள் நல்ல வழியை காண்பித்துக் கொடுப்பான். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளோடு நல்ல புரிதல் இருக்கும் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத பிரச்சினையிலிருந்து விலகி நிற்பீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை சீரான போக்கு இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். நல்ல பெயர் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மன சஞ்சலங்கள் விலகும். சந்தேகங்கள் விலகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை சின்னச் சின்ன ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பிரச்சினைகள் வராது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். பிள்ளைகளால் மன நிம்மதி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். புது எதிரிகள் உருவாக வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன வாக்குவாதங்கள் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். சோர்வு வெளிப்படும். சுறுசுறுப்பாக எல்லா வேலையையும் செய்து முடிக்க முடியாது. பல போராட்டத்திற்கு பிறகு நிச்சயம் வெற்றி அடைய முடியும். முயற்சிகளை கை விடாதீர்கள். தேவையில்லாமல் மனதை அலைபாய விட வேண்டாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு தெளிவை கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன தடுமாற்றம் இருக்கும். மன பயம் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை கூட வெளிப்படையாக பேச மாட்டீர்கள். மனதிற்குள்ளேயே பல விஷயங்களை போட்டு பூட்டி வைத்துக் கொள்கிறீர்கள். இந்த நாளை கவனமாக எடுத்துச் செல்ல வேண்டும். புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். முன் கோபம் வேண்டாம். நிதானத்தோடு இருந்தால் நல்லது நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பிறருக்கு தேவையான உதவிகளை பார்த்து பார்த்து செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் புது அனுபவம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஆரோக்கிய பிரச்சினைகள் சரியாகும். குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு ஆதரவாக உடன் இருப்பவர்கள் பேசுவார்கள். புது நண்பர்களின் அறிமுகம், புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். கொஞ்சம் செலவுகள் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வரும் பாத்துக்கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள்…

136 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கான தேவைகளை தேடி தேடி நீங்களே பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆசைகள் நிறைவேறும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும்…

105 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த பிரச்சினைகள்…

103 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். இன்றைய நாள் வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். கொஞ்சம் ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட…

131 0 0