உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா!

70 பார்வைகள்

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று (16) மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தீவிரமாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதியில் சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் இங்கிலாந்து அணியின் கார்டன் 55 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, அர்ஜென்டினா அணியின் என்சோ பெர்னாண்டஸ், லடாரோ மார்டினஸ் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். இதனால் போட்டியின் நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம், தோல்வியடைந்த இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.

உலகக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றும் இலக்குடன் அர்ஜென்டினா களமிறங்கவுள்ள நிலையில், இறுதிப்போட்டி கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்…

47 0 0
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து கால்பந்து அணியின் தோல்வி குறித்து இளவரசர் வில்லியம் வெளியிட்ட கருத்து!

ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர்…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிய தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழகம்.!

முள்ளியவளை – நாவல்காடு, ஐயங்கரன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் மணிவண்ணன் நினைவுக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி ஐங்கரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. ஐயங்கரன் விளையாட்டுக்கழகத் தலைவர்…

96 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து ஸ்பெயின் அணி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. டெக்சாஸின்…

100 0 0