உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 15.07.2026

ராசி பலன்கள் 3 மாதங்கள் முன்
155 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வீண்விரய செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பு இருக்கும். ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சம்பள உயர்வு கிடைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நிதானதோடு இருப்பீர்கள். பணிவு வெளிப்படும். கர்வம் குறையும். மனதில் இருந்து வந்த தேவையில்லாத சந்தேகங்களில் இருந்து விடுபடுவீர்கள். இல்லற வாழ்க்கையில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றியும் கொடுக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கொஞ்சம் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பயணங்களால் கொஞ்சம் உடல் அசதி ஏற்படும். பெரிதாக பிரச்சினைகள் இல்லை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிந்தனைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையற்ற யோசனை உங்களுடைய வேலையை கெடுக்க வாய்ப்பு உள்ளது. சிந்தனையை குறைத்துக் கொண்டு, வேலையில் முழு கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். மனக்கவலை இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வியாபாரம் கொஞ்சம் மந்தமாக செல்லும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடமையிலிருந்து தவற வேண்டாம். நிச்சயம் நல்லது நடக்கும்.

துலாம் துலாம் ராசிக்காரர்களை பொருத்தவரை என்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நல்லது, எதிர்பார்க்காத நல்லது என்று அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வசீகர பேச்சால் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அதிகமாக எதிர்பார்ப்பு வைக்கக்கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன ஏமாற்றத்தால் மனதளவில் சோகம் உண்டாக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை தைரியம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பக்குவமாக நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். புது மனிதர்களின் அறிமுகம் புதிய அனுபவத்தை கற்றுக் கொடுக்கும். நீண்ட நாள் சண்டை சச்சரவுகளை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். பகை விலகும் நாள். சொத்து பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு, பாசம், காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். நீண்ட நாள் மனதில் தேக்கி வைத்திருந்த காதலை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வெளியூர் பயணங்களால் சுப செலவுகள் ஏற்படும். மன அமைதி கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளுடன் ஒன்று சேருவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பிரச்சினைகள் வராது. நிதி நிலைமை சீராக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டு தேவைகளை பார்த்து பார்த்து செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பயணங்களால் நல்லது நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். முன் கோபத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0