உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

ரணிலும் சஜித்தும் விரைவில் இணைவார்கள் – முஜிபுர் ரஹ்மான் நம்பிக்கை!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
43 பார்வைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை ஓரணியில் இணைப்பதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

    இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

    “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தரப்பிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டமைதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

    எனவே, எதிர்கால அரசியல் தேவைகளைக் கருத்திற்கொண்டு இரு தரப்பினரையும் ஒரே முகாமாக இணைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுகள் சுமுகமாக இடம்பெற்று வருகின்றன.” – என்றார்.

    மேலும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான நேரடிச் சந்திப்புகள் அண்மையில் இடம்பெற்றுள்ளன என்றும், கட்சியின் செயலாளர்கள் மட்டத்திலும் தொடர் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இரு தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்!

    நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

    39 0 0
    இலங்கை செய்திகள்

    உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு “நிபுணதா சவிய” நிதி உதவித் திட்டம்!

    ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக நிபுணதா சவிய எனும் புதிய நிதியுதவித் திட்டத்தை…

    85 0 0
    இலங்கை செய்திகள்

    மூத்த தமிழ்த் தலைவர்களின் குறுகிய சிந்தனைகளே தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு காரணம் – டக்ளஸ் சுட்டிக்காட்டு!

    “பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் அஸ்ரப் நானா ஆகியோரின் சமர்த்தியமான தீர்மானங்களே மலையக மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் இன்றைய எழுர்ச்சிக்கு அடித்தளம் அமைத்திருந்தன” என  ஈழ…

    38 0 0
    இலங்கை செய்திகள்

    தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!

    “தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு…

    69 0 0