மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாமிமலை பெயர்லோன் தோட்ட சின்ன சூரிய கந்தை பிரிவில் வசிக்கும் மாரிமுத்து கந்தசாமி எனும் 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் இன்று காலை 9 .30 மணிக்கு பணிக்காக மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்ற போது அங்கு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
மஹிந்த, ரணில் ஊன்றுகோலுடன் வந்தாலும் அரசியலை விடமாட்டார்கள்.!
"நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பதற்கு பொதுமக்கள் தரப்பிலோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவிதப் பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால், தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும்...
பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,...
கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!
கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 3 ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை...
தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!
தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசு, தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை...
சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன்...
டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி...
விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன்...
மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!
மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில்...
மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...










