• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, July 6, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!

Mathavi by Mathavi
July 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
தொழிற்சங்கங்களை ஒடுக்குகின்றது அரசு.!
Share on FacebookShare on Twitter

தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தற்போதைய அரசு, தொழிற்சங்கங்களை நசுக்கி அழிக்கும் எண்ணத்துடன் செயற்பட்டு வருகின்றது என்று சுகாதாரத் தொழில்முறை நிபுணர்களின் தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் தொழிற்சங்க உரிமைகள் மீதான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளையும் நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் ‘தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம்’ உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் தொழிலாளர் வர்க்கம் இன்று பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. தொழிலாளர்களுக்குரிய உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதுடன், குறைந்தபட்ச சமூக உரையாடல்களுக்கான வாய்ப்புகூட இல்லாத நிலை காணப்படுகின்றது. ஆளும் தரப்பினருடனோ அல்லது அமைச்சர்களுடனோ தொழிற்சங்கங்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.

தொழிலாளர் அமைச்சின் ஊடாகச் சில தொழிற்சங்கங்களைச் செயலிழக்கச் செய்வதற்கும், அவற்றுக்குள் திட்டமிட்டுப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், நாட்டில் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், தொழிலாளர்கள் பெற்றுவரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் அமலில் உள்ளதுடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87 மற்றும் 88 ஆம் இலக்க உடன்படிக்கைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான தேசிய மற்றும் சர்வதேச சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஜனநாயகச் சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதை விடுத்து அவற்றின் மீது அழுத்தம் செலுத்துவதோ அல்லது தலையீடு செய்வதோ ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தற்போதைய இக்கட்டான நிலைமையைத் தனித்தனியாக எதிர்கொள்வது சாத்தியமற்றது. அதனால்தான், கடந்த 3ஆம் திகதி கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துச் சுயாதீன மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த ‘தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தை’ நாம் நிறுவியுள்ளோம்.

இந்த மத்திய நிலையம் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொழிற்சங்க சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.” – என்றார்.

Related Posts

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி விசாரணை.!

by Mathavi
July 6, 2026
0

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

மஹிந்த, ரணில் ஊன்றுகோலுடன் வந்தாலும் அரசியலை விடமாட்டார்கள்.!

மஹிந்த, ரணில் ஊன்றுகோலுடன் வந்தாலும் அரசியலை விடமாட்டார்கள்.!

by Mathavi
July 6, 2026
0

"நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பதற்கு பொதுமக்கள் தரப்பிலோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளிடமிருந்தோ எந்தவிதப் பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால், தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும்...

மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார். சாமிமலை பெயர்லோன் தோட்ட...

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

பிந்திய செய்தி – நீர்கொழும்பு சிறையில் கொடூர கலவரம்; 25 பேர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 5 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,...

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

கொட்டகலை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா.!

by Mathavi
July 6, 2026
0

கொட்டகலை, லொக்கில் தோட்டத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபத்தின் 10 ஆம் ஆண்டு பூர்த்தி மற்றும் வருடாந்த திருவிழா கடந்த ஜூலை 3 ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை...

சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!

சூழ்நிலை சீரடைந்ததும் மேலும் பல நிவாரணங்கள்.!

by Mathavi
July 6, 2026
0

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் மற்றும் வெளிப்புற பொருளாதாரச் சவால்கள் காரணமாக மக்களுக்கு எதிர்பார்த்த அளவு நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தாலும், சூழ்நிலை சீரடைந்தவுடன்...

டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!

டெங்கு கொத்தணிகள் பதிவானால் பல்கலைக்கழகங்கள் இழுத்து மூடப்படும்.!

by Mathavi
July 6, 2026
0

பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி மற்றும் உயர் கல்வி...

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

குருநாகல் மாவட்டம், நாரம்மல - வாரியபொல வீதியில் சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன்...

மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!

மக்கள் கோரினால் நாமலை களமிறக்கத் தயார்.!

by Mathavi
July 6, 2026
0

மக்கள் கோரிக்கை விடுத்தால், அடுத்த கட்டத் தேர்தல்களில் நாமல் ராஜபக்‌ஷவை வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில்...

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

மீண்டும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

by Mathavi
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று திங்கட்கிழமை (6) மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி