உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 01.07.2026

ராசி பலன்கள் 3 மாதங்கள் முன்
106 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மாதத்தின் முதல் நாள் இன்று. இந்த நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். நல்லதே நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். சந்தேகங்களை எல்லாம் விட்டு விடுவீர்கள். இந்த மாதத்தில் நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க வேண்டும் என்று நிறைய பிளான் பண்ணுவீங்க. உங்களுடைய எதிர்கால கனவு நிச்சயம் நிறைவேறும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் அதிகரிக்கும். உறுதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தீர்மானத்திலிருந்து பின்வாங்க மாட்டீர்கள். தன்னம்பிக்கை உங்களை வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நேரத்திற்கு தூங்குங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த நல்ல விஷயங்கள் நடக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளில் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் இலாபத்தோடு நிறைவடையும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று அடக்கத்தோடு பணிவோடு நடந்து கொள்வீர்கள். எந்த ஆர்ப்பாட்டமும் உங்களிடம் இருக்காது. உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சொத்து வாங்கக்கூடிய யோகமும் இருக்கு. கூடுமானவரை பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். தலைக்குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வாடகைக்கு வீடு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் புது விஷயங்களை கற்றுக் கொடுக்கும். வியாபாரத்தில் உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். எப்படியாவது வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம் என்ற எண்ணம் உங்களை முன்னேற்றி விடும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். சின்னச் சின்ன ஆசைகள் சந்தோஷங்கள் நிறைவேறும். சில பேருக்கு நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கவலைப்படாதீர்கள் சம்பளம் வந்த உடன் எல்லாம் சரியாகிவிடும். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். நல்ல வார்த்தைகளை பேசுவீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்‌. தேவைக்கேற்ப பணம் கையில் இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். முன் கோபப்படக் கூடாது, அவசரப்படக்கூடாது. வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. மன நிம்மதி கெட்டுப் போக நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். செய்த தவறுக்கு உண்டான மன்னிப்பை கேட்டுக் கொள்வீர்கள். உங்களுடைய தவறை நீங்களே உணர்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0