உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 30.06.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. சின்னச் சின்ன ஏமாற்றங்களோடு இந்த நாள் இருக்கும். முயற்சிகளை கைவிட வேண்டாம். சின்னச் சின்ன தோல்விகள் வந்தாலும், ஏமாற்றங்கள் வந்தாலும் அதை கடந்து சென்று உங்களுடைய கடமைகளை நிறைவேற்ற பாருங்கள். இறைவழிபாடு செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். சோம்பேறித்தனம் விலகும். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்காமல் வைத்திருந்த வேலைகளை, இன்று சரியாக செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் இன்று வெற்றி அடையும். வியாபாரத்திற்காக புதிய முதலீடுகள் செய்வதற்கு வங்கி கடன் முயற்சிக்கலாம். நண்பர்களோடு இருந்து வந்த மனஸ்தாபங்கள் சரியாகும். நல்ல புரிதல் உண்டாகும். தேவையற்ற சந்தேகங்கள் விலகும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். பாராட்டுகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பொன் பொருள் சேர்க்கை உண்டு. புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய செயலால் பெற்றவர்களுடைய மனம் குளிரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் பாராட்டு உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வாழ்க்கை துணைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். நீண்ட தூர பயணங்களால் மனநிறைவு உண்டாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிர்கால சேமிப்புக்கு பிள்ளையார் சுழி போடலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களுடைய பேச்சுத்திறமை வெளிப்படும். நாலு பேர் மத்தியில் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். உங்களுக்கு ஆதரவாக நாலு பேர் பேசுவார்கள். உறவுகளோடும் நண்பர்களோடும் நல்லிணக்கம் உண்டாக கூடிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதிகம் பேசாதீங்க. மனைவியோடு வாக்குவாதம் செய்யாதீங்க. சிந்தித்து செயல்பட வேண்டும். கூடுமானவரை முக்கியமான விஷயங்களை நாளை தள்ளிப் போடுங்கள். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0