உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!

45 பார்வைகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே பராகுவே அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக, 2-வது நிமிடத்தில் மத்தியாஸ் கலார்சா கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டின. அப்போது, முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் பராகுவே அணியின் நட்சத்திர வீரர் மிகுவெல் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய பராகுவே அணி, முதல் பாதி முடிவில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் சமநிலை கோலை அடித்து போட்டிக்குள் மீண்டும் வர துருக்கி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் பராகுவே அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்ட நேர முடிவில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி உலகக் கிண்ண தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

10 வீரர்களுடன் விளையாடிய போதிலும், முன்னிலை கோலை கடைசி வரை தக்கவைத்த பராகுவே அணி 3 புள்ளிகளை கைப்பற்றியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0