• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மல்லாவி மத்திய கல்லூரியில் ஜெயரட்ணம் நுண்கலையகம் திறந்து வைப்பு.!

Mathavi by Mathavi
June 18, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
மல்லாவி மத்திய கல்லூரியில் ஜெயரட்ணம் நுண்கலையகம் திறந்து வைப்பு.!
Share on FacebookShare on Twitter

இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work – More problem) என்ற எண்ணம் உருவாகி வருகின்றது. இதனால், எமது சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளும் நிலை அருகி வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்களின் அழகியல் சார் கலைகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ இன்று (18.06.2026) வியாழக்கிழமை காலை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நுண்கலையகமானது பெரும் மதிப்பிற்குரிய மருத்துவ கலாநிதியும் கொடைவள்ளலுமான விமல் ஜெயரட்ணம் அவர்களின் முழுமையான நிதிப் பங்களிப்புடன், ஜெயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சித்திரம், சங்கீதம், நடனம், நாடகம் ஆகிய நான்கு துறைகளுக்கும் தனித்தனியான வகுப்பறைகளை உள்ளடக்கியதாக இரண்டு மாடிகளைக் கொண்டு இந்த நுண்கலையகம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அதிபர் த.தர்மராஜா அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா நிகழ்வில், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் மற்றும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கொடையாளரான மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, தேசியக் கொடி மற்றும் பாடசாலைக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. புதிய கட்டடத்தின் பெயர்ப்பலகையை ஆளுநர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க, கட்டடத்தை மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் நாடா வெட்டித் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட மேடை நிகழ்வில், இப்பாடசாலைக்கு கடந்த காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளை அமைத்துக் கொடுத்ததுடன், தற்போது இந்த நுண்கலையகத்தையும் நிர்மாணித்துக் கொடுத்த மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களின் மகத்தான சேவையைப் பாராட்டி, அவருக்கு ‘வாழும் வள்ளல்’ விருது வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்து மாணவர்களுக்கு மக்கள் இசையைப் பயிற்றுவித்த பாடகரும் நடிகருமான கருங்குயில் அவர்களால், மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம் அவர்களை வாழ்த்தி உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலொன்றும் மாணவர்களால் இதன்போது இசைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள்,
‘ஒரு பாடசாலைக்கு அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சமூகம் உதவி செய்வதுதான் வழமை. ஆனால், இந்தப் பாடசாலைக்கு விடுதிக் கட்டடங்கள் மற்றும் நுண்கலையகம் என்பவற்றை அமைத்துக் கொடுத்த விமல் ஜெயரட்ணம் அவர்களுக்கும், இந்தப் பாடசாலைக்கும், ஏன் இந்த மாவட்டத்துக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை. ஆனாலும் அவர் தனது சொந்த வீட்டைக்கூட விற்று இந்த மிகப் பெரிய உதவிகளைச் செய்திருக்கின்றார். பணம் இருப்பவர்களிடத்தில் மனம் இருக்காது, மனம் இருப்பவர்களிடத்தில் பணம் இருக்காது என்று சொல்வார்கள். ஆனால், விமல் ஜெயரட்ணம் அவர்களிடம் அவை இரண்டும் நிறைந்திருக்கின்றது. அவரது தியாகத்தைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே போதாது.

தனது உரையில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்ட மருத்துவக் கலாநிதி விமல் ஜெயரட்ணம், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் யேசுதானந்தன் அவர்களால்தான் இங்கே இவ்வளவு விடயங்களையும் செய்ததாகக் கூறினார். அது முற்றிலும் உண்மை. முன்னாள் அதிபர் யேசுதானந்தன் மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை இந்தப் பாடசாலைக்கு வழங்கியிருந்தார். அவர் அன்று ‘இந்த மேலதிக வேலைகள் எனக்கேன்?’ என்று எண்ணியிருந்தால், இந்தப் பெரிய திட்டங்கள் பாடசாலைக்குக் கிடைத்திருக்காது. அதனால்தான், எல்லாமே ‘தலைமைத்துவத்தில்’ தான் தங்கியிருக்கின்றது என நான் பல தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றேன்.

எமக்குக் கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் வீணான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் அதிகரித்து வருகின்றமையால், மக்கள் அடைய வேண்டிய பல நன்மைகள் அவர்களைச் சென்றடைவதில்லை.

எனவே, மாணவர்களாகிய உங்களைச் சிறந்த தலைமைத்துவத்துடனும், ஆளுமையுடனும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் வலியுறுத்துகின்றேன். வெறும் புத்தகப் புழுக்களாக மாத்திரம் இருந்துவிடாமல், இந்தச் சமூகத்துக்குச் சேவை செய்யக்கூடியவர்களாக உங்களை நீங்களே வளர்த்தெடுக்க வேண்டும். சமூகத்துக்கு உதவி செய்பவர்களைத் தான் இந்தச் சமூகம் என்றும் மதிக்கும். எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும், சமூகத்துக்காக உழைக்காவிட்டால் அந்தப் பதவியால் எவ்விதப் பயனும் இல்லை.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நுண்கலையகமும், உங்களைப் படிப்புடன் மாத்திரம் சுருக்கிவிடாது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் உங்களது ஆற்றல்களை வெளிக்கொணரப் பெரிதும் உதவும், எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், அயற்பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

வட்டுவாகால் விகாரைக்குக் கீழேயும் பாரிய புதைகுழி – ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

by selvan
June 18, 2026
0

"செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின்...

செம்மணி புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது!

by selvan
June 18, 2026
0

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய...

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் DIRC கூட்டம்.!

சொண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் DIRC கூட்டம்.!

by Mathavi
June 18, 2026
0

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் உள்வாங்குதல், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதிக்கான பன்முக செயற்பாடுகள் யாழில் sond நிறுவனத்தின் ஊடாக யாழ். சர்வ மதக் குழு உடன்...

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

யாழ். பல்கலைக்கழக விவசாயபீடத்தின் உலர்வலய விவசாயம் பற்றிய ஆராய்ச்சி மாநாடு தொடர்பான தெளிவூட்டல்.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில்...

சுகீஸ்வர பண்டார கைது.!

சுகீஸ்வர பண்டார கைது.!

by Mathavi
June 18, 2026
0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில்...

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

ஹட்டன் அரச பேருந்து டிப்போ நவீனமயமாக்கல்.!

by Mathavi
June 18, 2026
0

667 மில்லியன் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள ஹட்டன் பேருந்து டிப்போவை நேற்று (17) ஆம் திகதி மாலை நேரில் பார்வையிட்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 18, 2026
0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை சுதந்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்தியும் குற்றவாளிகளுக்கு சட்டத்தினால் சரியான தீர்ப்புகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக்கோரியும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப...

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்; பொலிஸார் தீவிர விசாரணை.!

by Mathavi
June 18, 2026
0

நுவரெலியா நகரில் உள்ள தனியார் விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து சடலமாக நேற்று புதன்கிழமை (17) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

அரச காணிகளை பயன்படுத்த புதிய கொள்கை வருகின்றது.!

by Mathavi
June 18, 2026
0

அரச காணிக் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் என்பவற்றுக்கு அமைவாக இரத்து செய்ய வேண்டிய சுற்றறிக்கைகளை இரத்துச் செய்து புதிய சுற்றறிக்கைகளை வெளியிடவும்...

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி ஆசிரியை உயிரிழப்பு.!

by Mathavi
June 18, 2026
0

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இன்று (18) காலை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி, பூனாவை பொலிஸார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி