உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா!

27 பார்வைகள்

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே கொலம்பியா அணி ஆதிக்கம் செலுத்தியது.

போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் டேனியல் முஞோஸ் (Daniel Muñoz) முதலாவது கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் முதற்பாதி ஆட்டம் 1 – 0 என கொலம்பியாவுக்கு சாதகமாக நிறைவடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விறுவிறுப்பான இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில், உஸ்பெகிஸ்தான் அணியின் அப்போஸ்பெக் ஃபாய்குல்லாயேவ் (Abbosbek Fayzullaev) ஒரு கோலை அடித்து ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார்.

எனினும், அடுத்த சில நிமிடங்களிலேயே கொலம்பியா அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் டயஸ் (Luis Díaz) ஒரு கோலை அடித்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் மேலதிக நேரத்தில் கொலம்பியாவின் ஜமிண்டன் காம்பாஸ் (Jaminton Campaz) மற்றுமொரு கோலை அடிக்க, கொலம்பியா அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா அணி குழு K இன் புள்ளிகள் பட்டியலில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்த

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0