உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் – அரையிறுதியில் உக்ரைனை வீழ்த்தியது ரஷ்யா

24 பார்வைகள்

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில், தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரீவா, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் கொஸ்டியூக்கை தோற்கடித்தார்.

இதற்கமைய, இறுதிப் போட்டியில் அவர் தனது சொந்த நாட்டு வீராங்கனையான டயானா ஷ்னைடர் (Diana Shnaider) அல்லது போலந்தின் மாயா ச்வலின்ஸ்கா (Maja Chwalinska) ஆகிய இருவரில் ஒருவருடன் மோதவுள்ளார்.

2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டு வீரர், வீராங்கனைகள் பின்பற்றி வரும் வழக்கத்தின்படி, கொஸ்டியூக் போட்டிக்கு முன்னதாக தனது எதிர்த்தரப்பு வீராங்கனையுடன் பாரம்பரியமாக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு தோன்றுவதைத் தவிர்த்தார்.

அத்துடன், போட்டிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வலைக்கு அருகில் கைகுலுக்குவதையும் அவர் தவிர்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தொழில்முறை காற்பந்து வாழ்வுக்கு இந்த வருடத்துடன் முடிவு!

போர்த்துக்கல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமீபத்திய பேட்டி கால்பந்து உலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமது நீண்ட கால தோழியான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸுடன்…

61 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை தொடருக்கு முன்னர் சர்ஃபராஸ் கானுக்கு முடி வெட்டிவிட்ட முகமது சிராஜ்: வைரலாகும் காணொளி

இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலி…

57 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (Jorge Messi) காலமானதை அடுத்து, அவரது நெருங்கிய நண்பரும் சக வீரருமான ரொட்ரிகோ…

92 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சாகிப் அல் ஹசனின் மகுரா பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீது நேற்று (5) மாலை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல்…

90 0 0