உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை அணி 41 ஓட்டங்களால் அபார வெற்றி!

81 பார்வைகள்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.

இதற்குப் பதிலளித்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க, 103 பந்துகளுக்கு முகம் கொடுத்து 79 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது 19ஆவது ஒருநாள் அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார்.

அவரது இந்த இன்னிங்ஸில் 9 நான்கு ஓட்டங்களும் ஒரு ஆறு ஓட்டமும் அடங்கும்.

அதேபோல், அணியின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய தலைவர் குசல் மெந்திஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி, 62 பந்துகளில் தனது 35ஆவது ஒருநாள் அரைச்சதத்தைப் பதிவு செய்து 72 ஓட்டங்களைப் பெற்றார்.

இவர்களைத் தவிர, நடுத்தர வரிசையை வலுப்படுத்திய சரித் அசலங்க (45 ஓட்டங்கள்) மற்றும் ஜனித் லியனகே (ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள்) ஆகியோரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி, இலங்கை அணியின் ஓட்டப் பலகையை 300 ஓட்டங்கள் எல்லைக்கு மேல் கொண்டு செல்ல சிறந்த பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் மெதிவ் போர்ட் 9 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் 10 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி நடைபெற்ற ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில், இலங்கை அணி ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுவது 13 வருடங்களுக்குப் பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0