• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ்ப்பாணத்தில் உழவியந்திரம் மோதி பாதசாரி பலத்த காயம்: ஓட்டுநர் உரிமம் இல்லாத சாரதியால் விபத்து

selvan by selvan
June 3, 2026
in இலங்கை செய்திகள்.
0
யாழ்ப்பாணத்தில் உழவியந்திரம் மோதி பாதசாரி பலத்த காயம்: ஓட்டுநர் உரிமம் இல்லாத சாரதியால் விபத்து
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதி பகுதியில் வீதியோரமாக நடந்து சென்ற முதியவர் ஒருவர், பின்னால் வந்த உழவியந்திரத்தால் மோதுண்டு படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

நாவாந்துறை கடற்கரை வீதி வழியே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பாதசாரியாக நடந்து சென்றுள்ளார்.

இதன்போது, அவருக்கு பின்னால் வந்த நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான உழவியந்திரம் ஒன்று, எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் உழவியந்திரத்தின் அடியில் சிக்கி முதியவர் கடுமையான காயங்களுக்குள்ளானார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் சில அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன

குறிப்பிட்ட நாவாந்துறை மீன் வாடிக்கு சொந்தமான இந்த உழவியந்திரம், மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் ஏற்படுத்தும் இரண்டாவது விபத்து இதுவாகும்.

விபத்து நடந்த சமயத்தில் அந்த உழவியந்திரத்தை செலுத்திய சாரதியிடம், வாகனத்தை இயக்குவதற்கான எந்தவொரு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமும் (Driving License) இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாத சாரதிகளை கொண்டு, மக்கள் நடமாட்டம் மிகுந்த வீதிகளில் இவ்வாறான கனரக வாகனங்களை இயக்குவது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.”

இச்சம்பவம் குறித்து பொலிஸார் எந்தவிதத் தாக்கங்களுக்கும் உட்படாமல், பக்கச்சார்பற்ற மற்றும் விரிவான சட்ட விசாரணைகளை மேற்கொண்டு, தவறிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என பொதுமக்கள் வீதியில் இறங்கி தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

கோட்டாவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்!

கோட்டாவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்!

by selvan
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தற்போதைய அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்...

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்!

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் முன் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வது கட்டாயம்!

by selvan
June 3, 2026
0

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அனைவரும், பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களது தேசிய...

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் மறைமுக சதி குறித்து விளக்கமளிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்!

by selvan
June 3, 2026
0

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும் மறைமுக முயற்சி குறித்து, உடனடியாக விளக்கமளிக்குமாறுப பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் ஏற்பாடு: வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு!

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் ஏற்பாடு: வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் விசாரணைக்கு அழைப்பு!

by selvan
June 3, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பொலிஸ் விசாரணைக்கு நாளை அழைக்கப்பட்டுள்ளார்....

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

by selvan
June 3, 2026
0

நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை அதன் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது....

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் ஜே.வி. பி க்கும் இடையே சந்திப்பு

by selvan
June 3, 2026
0

ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் தனது மூன்று ஆண்டுகால இராஜதந்திரப் பணிக்காலத்தை...

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

மருதங்கேணியில் இறால்க் குளம் தூர்வாரும் பணிகள் ஆரம்பம்

by selvan
June 3, 2026
0

யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பொற்பதி (J/420) கிராம அலுவலர் பிரிவில், 1 மில்லியன் ரூபா செலவிலான இறால் குளம் தூர்வாரும் பணி இன்று உத்தியோகபூர்வமாக...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானம்

by selvan
June 3, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சமர்ப்பித்த சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. பண மோசடி...

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

சுரேஷ் சலேயின் விசேட மனு; நாளை அறிக்கை சமர்ப்பிக்குக.!

by Mathavi
June 3, 2026
0

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான குற்றவியல் விசாரணைகளில் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் கைது.!

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 3, 2026
0

பேராதனை, கொரகாதெனிய பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 6 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி