உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம்

81 பார்வைகள்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது.

அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு ஜமைக்காவின்,கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஷெய் ஹோப் தலைமைதாங்குகிறார்.

அதேசமயம் இலங்கை அணிக்கு விக்கெட் காப்பாளர் குசல் மெண்டீஸ் தலைமை தாங்குகிறார்.

இந்தத் தொடருக்காக முன்னாள் தலைவர் சரித் அசலங்க, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இடம்பெற்ற வலுவான அணியை இலங்கைத் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

2026 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்காவும், சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகள் அணியானது, இடது கை துடுப்பாட்ட வீரர் ஷிம்ரன் ஹெட்மயருடன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்களையும் சேர்த்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0