• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உள்ளூர் வளங்களைக் கொண்டு உச்ச பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.!

Mathavi by Mathavi
June 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
உள்ளூர் வளங்களைக் கொண்டு உச்ச பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.!
Share on FacebookShare on Twitter

கல்முனை பிரதேசத்தில் உள்ளூர் வளங்களைக் கொண்டு உச்ச பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபக்கரும் நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகருமான, சமூக சேவைகர் பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச அரசியல் களநிலவரம் தொடர்பில் சாத்தியமான அரசியல் கட்சி உருவாக்கத்துடன் மக்கள் முன் அறிமுகம் செய்ய வருகின்ற பொறியியலாளர் உதுமாங்கண்டு நாபீர், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் போது,
கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட தேர்தல் விரைவில் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசம் எங்கும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ள மக்களுக்கு நாபீர் பவுண்டேஷன் அமைப்பு புதிய பரிணாமத்துடன் அரசியல் கட்சி ஒன்றை ஸ்தாபித்து களம் இறங்குகிறது.

மக்கள் முன்னுள்ள சவால்களை முறியடித்து உள்ளூர் உச்சபட்ச வளங்களை கொண்டு, உயர்ந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு நல்ல சிந்தனை உள்ள திறமையுள்ள மக்கள் பிரதிநிதிகள் எமது கட்சியில் இணைக்கப்பட உள்ளார்கள். இதற்கான அழைப்பினை பகிரங்கமாக நாங்கள் விடுகின்றோம்.

மக்களது சேவையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல்பட விரும்புகின்ற அரசியல்வாதிகள் எதிர்வருகின்ற கல்முனை பிரதேச தேர்தல் களத்தில் எமது கட்சியில் பயணிக்க விரும்பினால் இப்போதே தொடர்பு கொள்ளுங்கள் என்ற அழைப்பை விடுக்கின்றோம்.

கல்முனை பிரதேச மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் சிறந்த ஆரோக்கியமுள்ள ஒரு கட்சியாக எமது கட்சி செயற்படுவதோடு, நாம் தேர்தலில் களம் இறக்கும் வேட்பாளர்களும் செயற்பாட்டு ஆரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

கடந்த காலங்களில் நாபீர் பெளண்டேசனானது அரசியல் அதிகாரம் இல்லாதிருக்கும் நிலையில் அமைப்புக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு மக்கள் நலன் பேணும் திட்டங்களை செய்து வருகின்றது.

ஆனால் அதிகாரத்துடன் புதிய கட்சியில் மக்கள் நலனை மட்டும் நோக்காகக் கொண்டு நாம் எமது தாய்ப் பிரதேசத்தில் களம் காணும்போது, கல்முனை பிரதேசம் எனும் எமது தாயக மக்கள் எங்கள் கைகளை பலப்படுத்த வேண்டும். இதனால் கடந்த கால அரசியல் வங்குரோத்து நிலையை எமது பிரதேசத்தில் இருந்து களைந்தெடுப்போம். கல்முனை பிரதேசம் பேசும் அழகாபுரியாக மாறும் திட்டங்களை நாம் அமுல்படுத்துவோம்.

நாங்கள் எவ்வளவு கஸ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்தாலும் எமது பிள்ளைகளுக்கு கல்வியினை கொடுத்து அவர்களை சமுதாயத்தில் உருவாக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடும் எங்களுக்கு இருக்கின்றது. கல்வியினை எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது, காசு சம்பாதிக்கின்ற குறிக்கோளை மட்டும் கையில் எடுத்து செயற்படவிடாமல், படித்த சமுதாயத்தினை கட்டி எழுப்புவதற்கான அடித்தளமாக கல்வியை மாற்ற வேண்டும். அது மார்க்க கல்வியாக இருந்தாலும் சரி.! உலகக் கல்வியாக இருந்தாலும் சரி.! அதனை நாங்கள் எமது பிள்ளைகளுக்கு கொடுப்பது எமது கடமையாகும்.
இதற்கு சரியான திட்டமிடல் வேண்டும்.

அதே போன்று தேர்தல் காலங்களில் முளைக்கின்ற அரசியல் காளான்களுக்கும் சிறந்த பாடம் புகட்ட மக்கள் முன்வர வேண்டும்.

சிறந்ததொரு அரசியல் கலாச்சாரமிக்க அரசியல் கல்வியினை கொடுக்கின்ற அல்லது அவர்களை தெளிவுபடுத்துகின்ற சமுதாயமாக மாற வேண்டும்.

இதற்காக தேசிய மக்கள் முன்னணியில் கைகோர்த்து, நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கின்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகின்றோம் என்றார்.

Related Posts

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு  சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

by selvan
June 2, 2026
0

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரேஸ்ட...

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

by selvan
June 2, 2026
0

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம்...

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

by selvan
June 2, 2026
0

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி,...

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறி முதலீட்டு விவகாரத்தினால், கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர...

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

by selvan
June 2, 2026
0

தாம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது 'சங்காதிகரண' (சங்க நீதிமன்றம்) சட்டமூலத்தைக் கொண்டு வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ...

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பலத்த...

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

by selvan
June 2, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி...

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

by selvan
June 2, 2026
0

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை...

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

by Mathavi
June 2, 2026
0

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவுகளின்' செயற்பாடுகள் மற்றும் '2025 - 2029...

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

by selvan
June 2, 2026
0

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதானதடையை உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது. எனினும் பிரதி முதல்வர் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபை மற்றும் அதன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி