• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!

selvan by selvan
June 2, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளது!
Share on FacebookShare on Twitter

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறி முதலீட்டு விவகாரத்தினால், கூட்டுத்தாபனத்திற்கு 536 மில்லியன் ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-

“ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 6 பில்லியன் ரூபாய் திறைசேரிப் பிணைமுறியைக் கொள்வனவு செய்த விவகாரத்தை ஐக்கிய மக்கள் சக்திதான் முதன்முதலில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் சந்தையில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்று எங்களது பொருளாதாரக் குழு ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், சோமதாச பலிஹவடன, முதன்மை நிறைவேற்று அதிகாரி நலின் சுபசிங்க மற்றும் ஸ்ரீயானி குலசிங்க ஆகிய மூவரும் இணைந்து, காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் வாடிக்கையாளர்கள் வைப்புச் செய்த பணத்தைப் பயன்படுத்தி இந்த 6 பில்லியன் ரூபாய் முதலீட்டைத் தன்னிச்சையாக மேற்கொண்டனர்.

தவறான நிதி முகாமைத்துவம் மற்றும் முறைகேடான இந்த முதலீட்டின் காரணமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்டுள்ள நிகர நட்டம் 536 மில்லியன் ரூபாயாகும்.

எனவே, பொதுமக்களின் பணத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய இந்தப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாகத் தராதரமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்திக் கோரிக்கை விடுக்கின்றது.

கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் இணைந்து கொண்டு நாட்டைச் சூறையாடிய அதே ஊழல் கும்பல், இப்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சுற்றியும் வலம் வந்துகொண்டிருக்கின்றது.

இவர்களின் இத்தகைய மறைமுக ஏமாற்று வேலைகளினால் நாடு மீண்டும் ஒருமுறை வங்குரோத்து நிலையை நோக்கியே தள்ளப்படும் என எச்சரிக்கின்றோம்.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியினுள் இயங்கும் ‘நிழல் அமைச்சரவை’ மூலம் தற்போதைய அரசாங்கத்தின் பல ஊழல்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கொள்கலன் மோசடி, திறைசேரி மோசடி, தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி மோசடி மற்றும் சொகுசு வாகன இறக்குமதி மோசடி உள்ளிட்ட பல பில்லியன் ரூபாய் ஊழல்களை எமது நிழல் அமைச்சரவை ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்குக்கொண்டு வந்துள்ளது.

எமது நிழல் அமைச்சரவையினரால் திரட்டப்படும் இவ்வாறான உத்தியோகபூர்வத் தகவல்களை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் எதிர்ப்பு முன்னணி தொடர்ந்து மக்களுக்குப் பகிரங்கப்படுத்தும். தற்போதைய அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்த இரகசியத் தகவல்கள் எமக்கு தினசரி கிடைத்து வருகின்றன.” – என்றார்.

Related Posts

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு  சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் நினைவேந்தல்

by selvan
June 2, 2026
0

2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களுக்கு சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் பருத்தித்துறை பகுதியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிரேஸ்ட...

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

தாயகப் பாடலை எடிட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பாடகர் யாழில் கைது!

by selvan
June 2, 2026
0

தாயக எழுச்சிப் பாடலை எடிட் செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கிளிநொச்சியை சேர்ந்த பாடகர் ஒருவர் இன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து யாழ்ப்பாணம்...

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

மக்களை ஆட்சியின் அங்கமாக்குவதே ‘பிரஜா சக்தி’! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு

by selvan
June 2, 2026
0

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது தற்போதைய மக்கள்நேய அரசாங்கத்தின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பகுதி என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கிராமிய அபிவிருத்தி,...

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

நாம் கொண்டு வந்த ‘சங்காதிகரண’ சட்டமூலத்தை அன்று எதிர்த்துவிட்டு இன்று ‘தர்மாதிகரணம்’ பேசுவது வேடிக்கையானது!

by selvan
June 2, 2026
0

தாம் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது 'சங்காதிகரண' (சங்க நீதிமன்றம்) சட்டமூலத்தைக் கொண்டு வந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ...

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது!

by selvan
June 2, 2026
0

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி பலத்த...

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!

by selvan
June 2, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி...

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

பாதுகாப்புப் பிரதியமைச்சர் திருகோணமலைக்கு விஜயம்! – காணி விவகாரங்கள் குறித்து ஆராய்வதாக உறுதி

by selvan
June 2, 2026
0

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று செவ்வாய்க்கிழமை முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை...

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

அரச வருமான நிறுவனங்களில் ஊழலை ஒழிக்க ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல்.!

by Mathavi
June 2, 2026
0

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பலப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவுகளின்' செயற்பாடுகள் மற்றும் '2025 - 2029...

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதான தடை நீக்கம்!

by selvan
June 2, 2026
0

வவுனியா மாநகர சபை, முதல்வர் மீதானதடையை உயர்நீதிமன்றம் விலக்கியுள்ளது. எனினும் பிரதி முதல்வர் மீதான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபை மற்றும் அதன்...

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்; வெள்ளிக்கிழமை உரும்பிராயில் நிகழ்வு.!

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்; வெள்ளிக்கிழமை உரும்பிராயில் நிகழ்வு.!

by Mathavi
June 2, 2026
0

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணிக்கு வலிகாமம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி