உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

ராசி பலன்கள் 4 மாதங்கள் முன்
51 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று கடமையில் தவறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு இருக்கும். பலவிதமான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடை விலகும். வெற்றி கிடைக்கும் நாள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த வாக்குவாத பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் பத்து ரூபாய் முதலீடு செய்தாலும், பத்து மடங்கு இலாபத்தை மீண்டும் எடுக்கலாம். எதிர்கால சேமிப்புக்கு உண்டான முயற்சிகளை தொடங்கலாம். கடனை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். பண பிரச்சினைகள் சரியாகும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வராதகடன் வசூல் ஆகும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. அனாவசியமாக கைபேசி பார்க்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் இப்போது நீங்கள் இருக்கக் கூடிய நிலையில் இருந்து ஒரு படி முன்னேற தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகள், வாய்ப்புகள் கைகூடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற நல்ல செய்தி வந்து சேரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். புதிய தொழில் தொடங்கலாம். இருக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை தரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக இருக்கும். எதிர்பாராத வருமானம் மன நிறைவை கொடுக்கும். கடன் சுமை குறையும். வீட்டிற்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுடைய ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருந்து விடுபடுவீர்கள். மனக்குழப்பம் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து நிம்மதி அடைவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். முன்கோபம் குறையும். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அனாவசிய செலவை குறைப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் இருக்கட்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். மனக்குழப்பம் நீங்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். வீண் விரைய செலவுகள் குறையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புது நண்பர்களின் அறிமுகத்தால் நிறைய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற அத்தனை தகுதிகளும் உங்களை வந்து சேரும். இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் உடல் சோர்வு வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0